For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அனல் பறக்கும் ஐபிஎல் இறுதிப் போட்டி : #KKRvsSRH - டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு!

08:12 PM May 26, 2024 IST | Web Editor
அனல் பறக்கும் ஐபிஎல் இறுதிப் போட்டி     kkrvssrh   டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு
Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

Advertisement

ஐபிஎல்2024 மார்ச் 22ம் தேதி தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், நடப்பு சாம்பியன்ஸான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமலேயே வெளியேறியது. இது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. கடந்த 21ம் தேதி குவாலிபயர் 1 போட்டி நடைபெற்றது. இதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் அணியுடன் குவாலிபயர் 2 சுற்றில் போட்டியிட்டது. இதில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதையும் படியுங்கள் : ராஜ்கோட் பயங்கர தீ விபத்து : “இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு” – குஜராத் உயர்நீதிமன்றம்!

இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு செல்வது நான்காவது முறை. அதுபோல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை இரண்டு முறை இறுதிப்போட்டிக்குள் சென்றுள்ளது. இதில் ஒருமுறை மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இது இறுதிபோட்டிக்கு முன்னேறிய மூன்றாவது முறை. ரசிகர்களிடையே எந்த அணி கோப்பையை வெல்லும் என்னும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஐபிஎல் இறுதிபோட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Tags :
Advertisement