Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாகை – இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு..!

11:07 AM May 18, 2024 IST | Web Editor
Advertisement

நாகை – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த ஆண்டு அக். 10-ம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக கேரள மாநிலம் கொச்சினில் உருவாக்கப்பட்ட செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல், நாகை துறைமுகத்திற்கு அக். 7-ம் தேதி வந்தடைந்தது.

இந்த கப்பலில் பயணிக்க பயணிகளுக்கான கட்டணம் 18% ஜிஎஸ்டி வரியுடன் ரூ.6,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கப்பலில் பயணிகள் 50 கிலோ எடை வரை எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தங்கள் உடமைகளை கொண்டு செல்லலாம் எனவும், இந்த பயணத்துக்கு பாஸ்போர்ட், இ விசா கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.  குறைவான பயணிகள் மற்றும் சீதோஷ்ண நிலையை காரணம் காட்டி இந்த பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிவகங்கை என்ற பெயர் கொண்ட புதிய கப்பல் கடந்த மே 13-ம் தேதி முதல் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.  இலங்கை செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்பதால் இந்த கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதுமானதாகும்.  இந்த சூழலில் கப்பல் சர்வதேச போக்குவரத்திற்கு சட்டபூர்வமான அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, மே 13 அன்று தொடங்க இருந்த நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு,  மே.17-ம் தேதி தள்ளிவைக்கப்பட்டது. மேலும் முன்பதிவு செய்த பயணிகள் பயண தேதியை மாற்றிக் கொள்ளலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கப்பல் சர்வதேச போக்குவரத்திற்கு சட்டபூர்வமான அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளதால், நாகை - இலங்கை பயணிகள் கப்பல் சேவை 3வது முறையாக தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை கப்பல் பயணத்திற்கு பதிவு செய்தவர்கள் தொகையை திரும்ப அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags :
#PostponednagaishipSrilanka
Advertisement
Next Article