For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மலக்குடலில் தங்கம் கடத்திய பெண் விமான ஊழியர்!

08:38 AM May 31, 2024 IST | Web Editor
மலக்குடலில் தங்கம் கடத்திய பெண் விமான ஊழியர்
Advertisement

மஸ்கட்டிலிருந்து கண்ணூருக்கு மலக்குடலில் மறைத்து தங்கம் கடத்திய பெண் விமான பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

ஓமன் நாட்டின் மஸ்கட்டிலிருந்து, கேரளாவின் கண்ணூருக்கு மே 28 அன்று செல்லும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.   அதன்படி,  கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், விமான பணியாளரான கொல்கத்தாவைச் சேர்ந்த சுரபி கதுன் என்ற பெண்,  அவரின் மலக்குடலில் 960 கிராம் அளவிலான தங்கத்தை மறைத்து எடுத்து வந்ததை அதிகாரிகள்  கண்டுபிடித்தனர்.  தொடர்ந்து, அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை 14 நாட்கள் கண்ணூர் பெண்கள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  அந்தப் பெண் ஏற்கனவே பலமுறை இதுபோன்று தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தியது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.   இந்த சம்பவத்தில் கேரளத்தின் கடத்தல் கும்பல்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement