நடிகர் ரஜினியின் உருவத்தை மரத்தூள்களால் வரைந்த பெண் ரசிகை !
ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு பெண் ரசிகை ஒருவர் ரஜினியின் உருவத்தை மரத்தூள்களால் வரைந்து அசத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 74 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள், மற்றும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கருண்யா நகர் பகுதியை சேர்ந்த ரேவதி சௌந்தர்ராஜன் என்பவர் தனியார் பள்ளி விடுதியில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
ஓவியம் மீது ஆர்வம் கொண்ட ரேவதி மரத்தூள்கள், காய்கறி, தானிய வகைகள் என பல்வேறு இயற்கை பொருட்களை கொண்டு ஓவியம் வரைந்து சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகையான இவர் பிறந்தநாள் அன்பளிப்பாக ஜெயிலர் படத்தின் காட்சியை மரத்துகள்களினால் ஓவியமாக வரைந்து தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் ரசாயனங்கள் கொண்டு இதுவரை ஓவியம் வரைந்தது இல்லை என ரேவதி தெரிவித்துள்ளார்.