FBI தலைவரான காஷ் படேல், X பயனர் 'டாக்டர். பரிக் படேலின் மகனா? - வைரலாகும் பதிவு | #FactCheck
This News Fact Checked by ‘Newsmeter’
அமெரிக்காவின் எஃப்.பி.ஐ இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள காஷ் பட்டேல் தனது மகன் என டாக்டர் பரிக் படேல் எனும் X பயனர் தெரிவித்திருந்தார். இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப காஷ்யப் 'காஷ் படேலை எஃப்.பி.ஐ. தலைவராக நியமித்தார். இந்த நிலையில் சமூக வலைதளப் பதிவு ஒன்று காஷ்யப் படேல் தனது மகன் அவருக்கு வாழ்த்துகள் என பரவியது. அப்பதிவின் X கணக்கு டாக்டர், பரிக் படேல், BA, CFA, ACCA, Esom ஆகும். இப்பயனர் புதிய எஃப்.பி.ஐ தலைவரான காஷ்யப் காஷ் படேலை தனது திறமையான மகன் எனக் குறிப்பிட்டிருந்தது.
டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள இரண்டு அமெரிக்க இந்தியர்களான காஷ் படேல் மற்றும் விவேக் ராமசுவாமியின் வாழ்க்கை மற்றும் அவர்கள் கடந்து வந்த பாதைகளை பற்றி இந்த சமூக வலைதளக் கணக்கு நகைச்சுவையாக வெளிப்படுத்தியது. நிஜ உலக சாதனைகளையுடன் கற்பனையான கூறுகளை கலந்து பதிவிடும் ட்வீட்களை உண்மையானதாக உணர வைக்கிறது. ஒரு பதிவில், குழந்தைகளுக்கு நிறைய பாதாம் ஊட்டுவது நல்லது ஏனெனில் அவர்கள் காஷ் படேல் மற்றும் விவேக் ராமசாமி போன்றவர்களைப் போல வெற்றிகரமானவர்களாக வளர உதவும் என்று கூறுகிறது.
இதேபோல மோட்டல் பார்க்கிங்கில் விளையாடி வளர்ந்த சிறுவயது நண்பர்களாக காஷ் படேல் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோரை நகைச்சுவையாகக் கற்பனை செய்து பதிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இவர்களில் இருவரில் ஒருவர் FBI இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விவேக், அரசாங்க செயல்திறன் துறையுடன் இணைந்து அரசாங்க செலவுகள் மற்றும் அதிகாரத்துவத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2021 இல் தொடங்கி, 'டாக்டர். பரிக் படேல் சமத் பலிஹாபிடியா, சாஹில் ப்ளூம் மற்றும் எலோன் மஸ்க் போன்ற பிரபலமான நபர்களை தனது 'மகன்கள்' என்று அறிவித்தார். இந்த பட்டியலில் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் அர்பன் ஷா போன்ற பிற சமூக வலைதள பயனர்களும் உள்ளனர்.
உண்மை சரிபார்ப்பு :
டாக்டர் பரிக் படேல் உண்மையான நபரா? என்பதை கண்டறிய அவரது எக்ஸ் கணக்கை ஆய்வு செய்ததில் டாக்டர் பரிக் படேல் கணக்கு ஒரு பகடி கணக்கு என்பது தெரியவந்தது. இந்தப் பெயர் பொதுவாக குஜராத் மக்களில் கலாச்சாரம் மற்றும் குடும்பப்பெயராகும். இதன்மூலம் 'படேல்' எனும் துணைப் பெயரானது பெற்றோராக இருக்குமோ என்கிற சந்தேகத்தை எழுப்பக் கூடியது. பயோவில் உள்ள கணக்கும் இது ஒரு பகடி கணக்கு என்பதை தெளிவுபடுத்துகிறது.
உண்மையில் காஷ் படேல் யார்?
காஷ்யப் 'காஷ்' படேல், 1980 ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள கார்டன் சிட்டியில் பிறந்தார், இவர் ஒரு முக்கிய அமெரிக்க வழக்கறிஞர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஆவார். இடி அமீனின் ஆட்சியின் போது அவரது பெற்றோர் உகாண்டாவிலிருந்து குடிபெயர்ந்தனர். பட்டேல் தனது இளங்கலைப் பட்டப்படிப்பை ரிச்மண்ட் பல்கலைக்கழகத்திலும், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சட்டமும் படித்து பட்டம் பெற்றார்,. பின்னர் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் சர்வதேச சட்டத்தில் சான்றிதழை முடித்தார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து நிர்வாகத்தில் படேல் முக்கியத்துவம் பெற்றார். அவர் தேசிய பாதுகாப்பு விஷயங்களில் மூத்த ஆலோசகர் உட்பட பல முக்கிய பாத்திரங்களை வகித்தார். ரஷ்யாவின் விசாரணையின் போது FBI கண்காணிப்பை விமர்சிக்கும் 'Nunes Memo' எழுதியது போன்ற சர்ச்சைக்குரிய தருணங்கள் அவரது வாழ்க்கையில் அடங்கும். டொனால்ட் ட்ரம்பின் நம்பத் தகுந்த நபராக இருப்பதால் அவரை ட்ரப் எஃப்.பி.ஐ இன் இயக்குநராக நியமித்துள்ளார்.
முடிவு :
அமெரிக்காவின் எஃப்.பி.ஐ இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள காஷ் பட்டேல் தனது மகன் என டாக்டர் பரிக் படேல் எனும் X பயனர் தெரிவித்திருந்தார். உண்மை சரிபார்ப்புக்கு உட்படுத்தியதில் அக்கணக்கு ஒரு போலி கணக்கும் என்றும் பகடிக்காக உருவாக்கப்பட்ட கணக்கு என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘Newsmeter’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.