Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சவுதியில் ஃபாசில் ஜோசஃப்பின் ‘மரண மாஸ்’ படத்திற்கு தடை!

சவுதியில் ஃபாசில் ஜோசஃப்பின் ‘மரண மாஸ்’ படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
09:48 PM Apr 12, 2025 IST | Web Editor
Advertisement

மலையாள இயக்குநர் ஃபாசில் ஜோசஃப்  ‘மின்னல் முரளி’ பேண்டஸி திரைப்படத்தை இயக்கி திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். அடுத்து நடிப்பில் களமிரங்கிய இவர் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே, சூக்ஷமதர்ஷினி, பொன்மேன், குருவாயூர் அம்பலநடை உள்ளிட்ட பல்வேறு படங்களில் ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.

Advertisement

இதையடுத்து அவர்  நடிகர் டொவினோ தாமஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவபிரசாத் இயக்கத்தில்  ‘மரண மாஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியானது. காமெடி  ஜானரில் உருவாகியிருக்கும் இருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தை வெளியிட சவுதி அரேபியா மற்றும் குவைத் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒருவர்  திருநங்கையாக காட்சிபடுத்தப்பட்டுள்ளதால் அந்நாட்டு தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது. மேலும் படத்தை வெளியிட வேண்டுமென்றால் திருநங்கை இடம்பெறும் காட்சியை நீக்க வேண்டும் என சென்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Basil JosephMaranamassSivaprasadTovino Thomas
Advertisement
Next Article