மகனின் பள்ளிக்கட்டண உயர்வு குறித்து தந்தையின் வேதனை பதிவு இணையத்தில் வைரல்!
சிபிஎஸ்இ பள்ளியில் பயின்று வரும் தனது மகனின் பள்ளிக்கட்டண உயர்வை குறித்து தந்தை ஒருவர், தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குர்கானில் வசிக்கும் உதித் பண்டாரி என்பவரின் மகன் சிபிஎஸ்இ பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், 3 ஆம் வகுப்பு பயின்று வரும் அந்த சிறுவனின் பள்ளி கட்டணம் தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து, தனது மகனின் பள்ளிக்கட்டண உயர்வை குறித்து அந்த நபர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இவரின் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள் : காரைக்குடியில் நாளை நடைபெற இருந்த அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்து!
இது தொடர்பாக உதித் பண்டாரி என்பவரின் பதிவில் தெரிவித்திருப்பதாவது :
"எனது மகனின் பள்ளி கல்வி கட்டணம் வருடத்திற்கு 10% அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் கட்டண உயர்விற்கான காரணம் குறித்து பள்ளி நிர்வாகம் எந்த விளக்கமும் தரவில்லை. ஆனால், அதிக கல்வி கட்டணத்தை மட்டும் தங்களின் பள்ளி நிர்வாகம் செயலியில் பதிவேற்றி விடுகின்றனர்.இது குறித்து பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததற்கு, ’தயவு செய்து உங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்த்து விடுங்கள் என்று பள்ளி நிர்வாகம் கூறுகிறது?
இவ்வாறு உதித் பண்டாரி தெரிவித்திருந்தார்.