டெல்லி நெடுஞ்சாலையில் விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு | தொடர்ந்து அதிகரிக்கும் பதற்றம்!
விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடு! என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் டெல்லி நோக்கி புறப்பட்டனர்.
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிசெய்ய வேண்டும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானாவை சேர்ந்த விவசாயிகள் டெல்லி சலோ பேரணியில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் எல்லைகளிலேயே போலீசார் தடுத்து வைத்தனர்.
தொடர்ந்து பஞ்சாப் - அரியானா எல்லையில் கண்ணீர் புகைக்குண்டுகளை போலீசார் வீசியதில், ரப்பர்குண்டு பாய்ந்து சுப்கரண்சிங் என்ற 21 வயது இளம் விவசாயி உயிரிழந்தார். தொடர்ந்து 2 நாட்களுக்கு போராட்டத்தை தற்காலிகமாக விவசாயிகள் நிறுத்தி வைத்தனர்.