Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விவசாயிகள் போராட்டம்: மீண்டும் கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு...

03:29 PM Feb 21, 2024 IST | Web Editor
Advertisement

ஷம்பு எல்லையில் போராடும் விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

Advertisement

விவசாயிகள் போராட்டம் 9-வது நாளாக நீடிக்கிறது. மத்திய அரசுடனான 4 சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில்,  விவசாயிகள் மீண்டும் டெல்லியை நோக்கி பேரணியாக (டெல்லி சலோ) தயாராகினர்.  இயக்கத்தில் ஈடுபட்டுள்ள 14 ஆயிரம் விவசாயிகள் தங்களது 1200 டிராக்டர்களுடன் ஷம்பு எல்லையை கடக்க முயன்றுள்ளனர்.

அரசு முன் விவசாயிகள் 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அதில் 10 அம்ச கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன.  மூன்று கோரிக்கைகள் தொடர்பாக குழப்ப நிலை உள்ளது.  மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான 5வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை சண்டிகரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மத்திய வேளாண்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா,  5வது சுற்று பேச்சுவார்த்தைக்கு அமைதியை பேணுவது முக்கியம் என தெரிவித்தார்.

இந்நிலையில் ஷம்பு, கானௌரி எல்லையில் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முயன்றபோது,  அவர்கள் மீது போலீசார் 15 முதல் 20 ரவுண்டுகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.  விவசாயிகளின் போராட்டம் காரணமாக குருகிராம்-டெல்லி எல்லையில் நீண்ட நேரம் நெரிசல் ஏற்பட்டது.  இந்த எல்லைகளை டெல்லி போலீசார் தடை செய்துள்ளனர்.

Tags :
Delhi | Haryana | Punjab | Farmers Protest 2024 | Delhi Chalo | Delhi Chalo March | Farmers | Protests |
Advertisement
Next Article