Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பூண்டு விலை உயர்வு எதிரொலி-பூண்டு திருட்டை தடுக்க விவசாயிகளின் நூதன செயல்!

07:24 PM Feb 18, 2024 IST | Web Editor
Advertisement

மத்தியப் பிரதேசத்தில் பூண்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளதையடுத்து விவசாயிகள்  வயல்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளனர்.

Advertisement

கடந்த சில நாட்களாக பூண்டின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு ரூ.400 முதல் 500 வரை விற்பனை செய்யப்படுவதால் அதனை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.  இந்நிலையில், வயல்வெளியில் இருந்து பூண்டு திருடு போவதாக விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். மேலும், பூண்டு பயிரை பாதுகாக்க விவசாயிகள் புதிய யுக்தியை கையாளுகின்றனர். இந்நிலையில், பூண்டு பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்  : விடுமுறை தினம்... சென்னையில் முக்கிய சாலைகளில் ஸ்தம்பித்த போக்குவரத்து!

இதுகுறித்து மத்தியப் பிரதேச மாநிலம், பத்னூர் கிராமத்தில் வசிக்கும் பூண்டு விவசாயி ராகுல் தேஷ்முக் கூறியதாவது,

"அண்மையில் எனது வயலில் இருந்து 8 முதல் 10 கிலோ பூண்டுகளை திருடி போலீசாரிடம் ஒருவர் சிக்கினான். இந்த சம்பவத்திற்குப் பிறகு நான் எனது வயலைச் சுற்றி சிசிடிவி கேமராக்களை பொருத்தி பாதுகாத்து வருகிறேன். நான் 13 ஏக்கர் நிலத்தில் பூண்டு பயிரிட்டுள்ளேன். அதற்காக மொத்தம் ரூ.25 லட்சம் செலவு செய்தேன். இதுவரை ரூ.1 கோடி ரூபாய்க்கு பூண்டு விற்பனை செய்துள்ளேன். மேலும் 4 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பூண்டு பயிரைக் கண்காணிக்க 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன"  இவ்வாறு அவர் கூறினார்.

பத்னூரில் பூண்டு விவசாயி பவன் சௌத்ரி கூறியதாவது, "எனது வயலைக் கண்காணிக்க மூன்று சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளேன். இரண்டு கேமராக்கள் என்னுடையது. ஒரு கேமரா வாடகை. எனது வயல்களில் இருந்து பூண்டுகள் திருடப்பட்டதால் இந்த கேமராக்களை நிறுவ வேண்டியிருந்தது. 4 ஏக்கர் பூண்டு பயிரில் ரூ. 4 லட்சம் செலவு செய்து 6 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டி உள்ளேன்" இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
#pricescamerasCCTVfarmersfieldsGarlicMadhya pradeshRise
Advertisement
Next Article