For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

UPPSCயில் வெற்றி பெற்ற விவசாயியின் மகள் நித்தி சிங் - முதல் முயற்சியில் 39வது ரேங்க்..!

09:11 AM Jan 28, 2024 IST | Web Editor
uppscயில் வெற்றி பெற்ற விவசாயியின் மகள் நித்தி சிங்   முதல் முயற்சியில் 39வது ரேங்க்
Advertisement

உத்தர பிரதேசம் மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்த நித்தி சிங் UPPSC தேர்வில் முதல் முயற்சியிலேயே 39வது ரேங்க் பெற்று வெற்றி பெற்றார்.

Advertisement

உத்தரபிரதேச பொது சேவை ஆணையம் (UPPSC) சமீபத்தில் ஒருங்கிணைந்த மாநில/மூத்த கண்காணிப்பாளர் சேவை (PCS) தேர்வு முடிவுகளை அறிவித்தது. உத்தர பிரதேசம் மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் நித்தி சிங். அவர் தனது முதல் முயற்சியிலேயே SDM (துணை கலெக்டர்) பதவியைப் பெற்று தனது முத்திரையைப் பதித்தார்.

கிராம பஞ்சாயத்து தரௌலியில் உள்ள மஜ்ரா நாயகோனை சேர்ந்த வீர்பால் சிங் மற்றும் பிரகதி தம்பதியரின் மகளான நித்திசிங், தனது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவரது தந்தை, விவசாயி மற்றும் அவரது தாயார், மதுரா அங்கன்வாடி பணியாளர். தரௌலி கிராமப் பஞ்சாயத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் இவர் 5 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.

அதன் பின் உத்தர பிரதேசம் மாநிலம், ஜோதிபா பூலே நகர் மாவட்டத்தில் உள்ள ரஹ்ராய் கிராமத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி குடியிருப்புப் பள்ளியில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை தனது கல்விப் பயணம் தொடர்ந்தார். பின்னர், பிஹாரி சிங் கேர்ள்ஸ் இன்டர் காலேஜ், ரஹாரா, 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்றார். 2021 ஆம் ஆண்டு, மொரதாபாத் இந்து கல்லூரியில் நித்தி சிங் பி.எஸ்சி பயின்றார்.

இதையடுத்து, தனது பட்டப்படிப்புக்குப் பிறகு, நிதி தனது சிவில் சர்வீசஸ் தயாரிப்பு பயணத்தைத் தொடங்க டெல்லி சென்றார். யுபிபிஎஸ்சி பிசிஎஸ் தேர்வில் 39வது ரேங்க் பெற்று எஸ்டிஎம் என்ற பிறநாட்டுப் பதவியை வென்றுள்ளார். மேலும், UPPSC PCS முடிவுகளில், 251 பதவிகளில், 84 பெண்கள் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் ; ஏடன் வளைகுடாவில் 22 இந்தியர்களுடன் சென்ற கப்பலில் தாக்குதல் | மீட்பு பணியில் இறங்கிய இந்திய கடற்படை...!

இது குறித்து நித்தி சிங் கூறியதாவது;

"வீட்டில் இருந்தபடியே பிசிஎஸ் தேர்வுக்கு தயார் ஆகினேன். கல்லூரி நூலகம் பெரிதும் உதவியாக இருந்தது. மாணவர்கள் சமூக ஊடகங்களைக் குறைவாகப் பயன்படுத்தவும், சுயமாகப் படிக்கவும் மாணவர்களிடம் வேண்டுகோள்காக வைக்கிறேன். இது அனைத்து தேர்வுகளுக்கும் சிறப்பாகத் தயாராகவும், சிறந்த முடிவுகளை அடையவும் உதவும். தினமும் எட்டு மணி நேரம் படி வேண்டும் . சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தாமல், அதில்  இருந்து விலகி இருக்க வேண்டும். தனது வெற்றியின் பெருமையை தனது ஆசிரியர் பிரமோத் நகர், மற்ற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு பெருமையை தருகிறது" இவ்வாறு நித்தி சிங் தெரிவித்தார்.

Tags :
Advertisement