ரசிகர்களை கண்டித்த அஜித் : என்ன நடந்தது..?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். சமகாலத்தில் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களை கொண்ட நடிகராக அஜித் உள்ளார்.
ஆனால் மற்ற நடிகர்களை போல அல்லாமல் அஜித் தன் ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டார். மேலும் பொது வெளியிலும் தன் ரசிகர்களின் செயல்பாடுகள் குறித்தும் அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறார்.
நடிகராக மட்டுமில்லாமல் ரேஸிங்கிலும் ஆர்வம் உள்ள அஜித், அஜித்குமார் ரேஸிங் என்ற கார் பந்தய அணியையும் நடத்தி வருகிறார். தற்போது அஜித் ஸ்பெயினில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார். இதனால் அங்கு அஜித்தை பார்க்க ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றும் ரேஸ் ட்ராக்கில் அஜிதை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். அப்போது ரசிகர்களை பார்த்து அஜித்குமார் கையசைத்தார். இதனால் ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். உடனே அஜித்குமார் ’அப்படி செய்யக்கூடாது’ என்று சைகை செய்து ரசிகர்களை கட்டுப்படுத்தினார்.