For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஹர்திக் பாண்டியாவை விமர்சிப்பதை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும்"- சௌரவ் கங்குலி வேண்டுகோள்!

06:06 PM Apr 07, 2024 IST | Web Editor
 ஹர்திக் பாண்டியாவை விமர்சிப்பதை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும்   சௌரவ் கங்குலி வேண்டுகோள்
Advertisement

"ஹர்திக் பாண்டியாவை விமர்சிப்பதை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும்" என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

17-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கி மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதனையும் படியுங்கள் : ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

இந்த நிலையில் மார்ச் 24ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ்  வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் சஹா ஆகியோர் களம் இறங்கினர். இதையடுத்து, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார். மும்பை அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து,  169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி  20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.

இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் செயல் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.  மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்தவர் ரோஹித் சர்மா. ஆரம்பத்தில் ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டபோது ரோஹித் சர்மா மும்பை அணியில் தொடர்வாரா அல்லது வேறு அணிக்கு செல்வாரா என விவாதிக்கப்பட்டது.

ஆனால் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே தொடர்ந்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியில் விளையாடி வருகிறார். இந்த நிலையில்  பந்து வீசச் சென்ற அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ரோஹித் சர்மாவை பவுண்ட்ரி லைன்களில் ஃபீல்டராக நிற்கச் சொல்லி சைகையால் உத்தரவு பிறப்பித்தார். இதன்படி ரோஹித்தும் பவுண்ட்ரி லைன்களில் போய் தனது ஃபீல்டிங்கை தொடர்ந்தார்.

இந்த செயல் சர்ச்சையான நிலையில் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை கேலி செய்யக் கூடாது எனவும், மும்பை இந்தியன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஹர்திக் பாண்டியாவின் தவறல்ல எனவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது..

“ ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை தேவையில்லாமல் விமர்சிப்பதும், கேலி செய்வதும் கூடாது என நினைக்கிறேன். அது சரியல்ல. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்துள்ளது. விளையாட்டில் கேப்டன்சி மாற்றங்கள் என்பது நடக்கக் கூடியதுதான். நீங்கள் இந்திய அணியை வழிநடத்தினாலும், ஒரு மாநிலத்தின் கிரிக்கெட் அணியை வழிநடத்தினாலும், டி20 லீக் தொடரின் அணியை வழிநடத்தினாலும் நீங்கள் கேப்டனாகவே நியமிக்கப்பட்டுள்ளீர்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய அணிக்காக கேப்டனாகவும், ஒரு வீரராகவும் தனது சிறப்பான பங்களிப்பை அவர் வழங்கியுள்ளார். மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதில் அவரது தவறு ஒன்றுமில்லை. நாம் அனைவரும் அதனை புரிந்துகொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement