For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மகாராஷ்டிராவில் ’டைகர் 3’ படம் வெளியான தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த ரசிகர்கள்!

04:56 PM Nov 13, 2023 IST | Web Editor
மகாராஷ்டிராவில் ’டைகர் 3’ படம் வெளியான தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த ரசிகர்கள்
Advertisement

மகாராஷ்ட்ராவில் நடிகர் சல்மான்கான் நடிப்பில் தீபாவளி வெளியீடான ’டைகர் 3’ படத்தின் சல்மான் கானின் அறிமுக காட்சிகளின் போது, திரையரங்குக்குள் ரசிகர்கள் வெடி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

ஸ்பை த்ரில்லர் யுனிவர்ஸ் படங்களில் ஒன்றான ’டைகர் 3’ படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. நடிகர் சல்மான்கான் நடிப்பில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் கத்ரினா கைஃப், இம்ரான் ஹாஷ்மி, சிம்ரன், ரித்தி டோக்ரா, ரன்வீர் ஷோரே ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை மனீஷ் சர்மா இயக்கியுள்ள நிலையில் யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிச்சயம் இப்படம் ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் விருந்து படைக்கும் என படக்குழு தெரிவித்திருந்த நிலையில், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களில் அதிகாலை காட்சி திரையிடப்பட்ட நிலையில் நள்ளிரவு முதலே ரசிகர்கள் தியேட்டரில் குவிந்தனர். தியேட்டர் வளாகங்கள் திருவிழாக்கோலம் பூண்டது.

பட்டாசு வெடிப்பது, பாலாபிஷேகம், நலத்திட்ட உதவிகள் வழங்குவது என சல்மான் கான் ரசிகர்கள் அமர்களப்படுத்தினர். இப்படியான நிலையில் மகாராஸ்ட்ராவில் உள்ள மாலேகான் நகரத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் “டைகர் 3” படம் திரையிடப்பட்டிருந்த நிலையில் அங்கு முதல் காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர்.

சல்மான்கானை திரையில் பார்த்த உற்சாகத்தில் சிலர் தியேட்டர் உள்ளேயே பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்த படத்தில் நடிகர் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அவரின் காட்சி வரும்போது ராக்கெட்டுகளை சரமாரியாக பறக்கவிட்டு ரசிகர்கள் கொண்டாடினர்.

ராக்கெட்டுகளும், பட்டாசுகளும் ஒரே நேரத்தில் வெடித்ததால் தியேட்டரில் படம் பார்க்க சென்ற ரசிகர்கள் தெறித்து ஓடினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் ஒரு இடத்தில் இப்படியான ஆபத்தான செயலில் ரசிகர்கள் ஈடுபட்டதற்கு பலரும் கண்டனம்  தெரிவித்தனர். இதனையடுத்து மாலேகான் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளனர்.

Tags :
Advertisement