For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரபல தென்கொரிய நடிகர் #China-வில் மரணம்… காரணம் என்ன?

08:10 AM Dec 03, 2024 IST | Web Editor
பிரபல தென்கொரிய நடிகர்  china வில் மரணம்… காரணம் என்ன
Advertisement

தென் கொரிய நடிகர் பார்க் மின் ஜே உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பிரபல தென் கொரிய நடிகர் பார்க் மின் ஜே (32). இவர், தி கொரியா-கிதான் போர், டுமாரோ, லிட்டில் வுமன் உள்ளிட்ட கொரியன் தொடர்களில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தார். இந்த நிலையில், இவரின் இறப்பு குறித்த தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிக் டைட்டில் மற்றும் கே-மீடியா ஏஜென்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"நடிப்பை விரும்பி எப்போதும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த நடிகர் பார்க் மின்-ஜே சொர்க்கத்திற்கு சென்றுவிட்டார். நடிகர் பார்க் மின்-ஜே மீதான உங்கள் அன்புக்கும் ஆர்வத்திற்கும் மிக்க நன்றி. இனி அவரின் நடிப்பை பார்க்க முடியாவிட்டாலும், சிறந்த நடிகராக அவரை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வேன். அவரின் ஆத்மா சாந்தியடைந்த பிரார்த்திப்போம்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்க் மின் ஜே -வின் இறப்பு செய்தி நேற்று அறிவிக்கப்பட்டாலும் அவர் கடந்த நவ.29ம் தேதி சீனாவில் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. அவரின் இறுதிச்சடங்கு நாளை (டிச.4) காலை 9.30 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags :
Advertisement