Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரபல பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்!

09:13 PM Jan 09, 2025 IST | Web Editor
Advertisement

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (80) உடல்நலக்குறைவால் காலமானார்.

Advertisement

தென்னிந்திய அளவில் பிரபலமான பின்னணிப் பாடகராக அறியப்பட்டவர் பி.ஜெயச்சந்திரன். கேரளாவைச் சேர்ந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

தமிழில் மூன்று முடிச்சு, அந்த 7 நாட்கள், வைதேகி காத்திருந்தாள், இணைந்த கைகள் உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இந்த நிலையில், பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக கேரளாவில் உள்ள திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பாடகர் ஜெயச்சந்திரன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 80. சிறந்த பின்னணிப் பாடகருக்கான மதிப்புமிக்க தேசிய திரைப்பட விருது, ஐந்து கேரள மாநில திரைப்பட விருதுகள், கேரள அரசின் ஜே.சி. டேனியல் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளார்.

Advertisement
Next Article