For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரபல பாடகிக்கு ஏற்பட்ட செவித்திறன் குறைபாடு! - ஏன் தெரியுமா?

09:42 AM Jun 19, 2024 IST | Web Editor
பிரபல பாடகிக்கு ஏற்பட்ட செவித்திறன் குறைபாடு    ஏன் தெரியுமா
Advertisement

பிரபல பாடகியான அல்கா யாக்னி தனக்கு அரிய வகை செவித்திறன் குறைபாடு இருப்பதாக தனது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

1980ம் ஆண்டு இந்தி சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் அல்கா யாக்னிக்.  குறிப்பாக உதித் நரேன் மற்றும் அல்கா யாக்னி இணைந்து நிறைய பாடல்கள் பாடியுள்ளனர்.  90ஸ் கிட்ஸ் மற்றும் இன்றையத் தலைமுறையைச் சேர்ந்தவர்களும் அல்கா யாக்னிக் பாடல்களை ரசித்துக் கேட்பார்கள்.  அவர் கிட்டதட்ட 1,114 திரைப்படங்களில் 2,486 பாடல்களை பாடியுள்ளார்.  இதனிடையே அல்கா யாக்னிக் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனக்கு அரிய வகை செவித்திறன் பாதிப்பு இருப்பதாக அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது :

"கடந்த சில நாட்கள் முன்பு விமானத்தில் இருந்து நான் வெளியேறினேன் . அப்போது திடீரென்று  என்னால் எதையும் கேட்க முடியவில்லை.  என்னுடைய நண்பர்கள் மற்றும் ரசிகர்களுடம் இந்த தகவலை நான் பகிர்ந்துகொண்டேன்.  என் மருத்துவர்கள் எனக்கு அரிய வகை நரம்பியல் வழி செவித்திறன் பாதிப்பு இருப்பதாக கண்டறிந்துள்ளார்கள்.

இதையும் படியுங்கள் : உசிலம்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் பெற்ற பில் கிளார்க்! – அதிரடியாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்!

இது ஒருவகை வைரஸ் தாக்குதலால் ஏற்படக் கூடியது.  இப்படியான ஒன்றை எதிர்கொள்ள நான் தயாராகவே இல்லை.  ஆனால், இதை பொறுமையாக கையாளவே முயற்சி செய்கிறேன்.  ரசிகர்களாகிய நீங்கள் அதுவரை எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.  என் ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் அதிகப்படியான சத்தம் மற்றும் ஹெட்ஃபோன்ஸ் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள்.  என்னுடைய உடல் நிலை பற்றிய தகவல்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வது வரை எனக்கு உங்களுடைய ஆதரவு வழங்கியபடி இருங்கள்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அல்கா யாக்னிக் பாதிக்கப் பட்டிருப்பது மிகவும் அரிய வகையான நோய் என்றும் இது ஒரு லட்சத்தில் 5 முதல் 20 நபர்கள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.  இது அதிக நேரம் மற்றும் அதிக சப்தத்துடன் ஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement