For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இந்தப் படம் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்...." | ‘வாழை’ திரைப்படத்தை புகழ்ந்த பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம்!

09:30 PM Aug 08, 2024 IST | Web Editor
 இந்தப் படம் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்        ‘வாழை’ திரைப்படத்தை புகழ்ந்த பிரபல ஒளிப்பதிவாளர் பி சி  ஸ்ரீராம்
Advertisement

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாழை’ திரைப்படத்தை புகழ்ந்து பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாழை’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், ஜே.சதிஷ் குமார், திவ்யா துரைசாமி, ஜானகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ், ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் இப்படத்தை விநியோகம் செய்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில்,  பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இந்தப் படத்தை புகழ்ந்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,  "இந்தப் படம் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இந்தப் படம் உண்மையாக நடப்பவையை பிரதிபலிப்பதால் உங்களால் எதுவும் பேசமுடியாது. ஒவ்வொரு படமும் ஒரு கற்றல்தான்" என பதிவிட்டுள்ளார்.

ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தமிழில் சைக்கோ படத்துக்கும் ஹிந்தியில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 (தொடர்), தெலுங்கில் லவ் மீ படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இவர் நாயகன் படத்துக்காக தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement