ஆலங்குடி வீரஆஞ்சநேயர் கோயிலில் குடமுழுக்கு விழா!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலங்குடி வீர ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 200 ஆண்டுகள் பழமையான வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நிலையில் கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதற்கான திருப்பணி வேலைகள் கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்றது.
திருப்பணி வேலைகள் முடிந்து அதன் தொடர்ச்சியாக இக்கோயில்களின் கும்பாபிஷேக விழா வெகு விமர்சியா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயில் முன்பு இரண்டு நாள் யாகசாலை அமைக்கப்பட்டு பல்வேறு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற்றன.
பின்பு , கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் தீபாரணை ஏற்ற ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.