பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகை ஸ்ருத்திகா அர்ஜூன் வெளியேற்றப்பட்டார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் 17 சீசன்களை வெற்றிகரமாக கடந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18 வது சீசன் தொடங்கப்பட்டது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகை ஸ்ருத்திகா அர்ஜூன் கலந்து கொண்டார். ஹிந்தி பிக்பாஸில் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் அவர் ஹிந்தி பிக்பாஸில் கலந்து கொண்ட முதல் தமிழ் நடிகை என்ற சாதனையுடனே வீட்டிற்குள் நுழைந்தார்.
வீட்டிற்குள் சென்றதும் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஹிந்தி ரசிகர்களையும் கவர்ந்தார். மற்ற போட்டியாளர்கள் தங்களை பக்குவபட்டவர்களாக காட்டி கொண்டனர். ஆனால் ஸ்ருத்திகா மட்டும் தனது குழந்தை தனத்தை வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.
13 வாரங்கள் கடந்த நிலையில் வாரத்தின் இடையில் ஒருவரை வெளியேற்றுவதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஸ்ருத்திகா குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
மக்கள் மனதை வென்ற ஸ்ருத்திகாவை வீட்டை விட்டு வெளியேற்றுவது நியாயமற்றது என அவரது ரசிகர்கள் தங்களது கருத்தை சமூக வலைதலங்களில் படிவிட்டு வருகின்றனர்.