Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முஸ்லிம்களின் கருவுறுதல் விகிதம் அதிகரிப்பட்டதாக பரவும் பொய் தகவல்கள் - உண்மை என்ன?

11:13 AM Nov 15, 2024 IST | Web Editor
Advertisement


This News Fact Checked by  ‘BOOM’

Advertisement

பிற மதத்தினருடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் முஸ்லிம்களின் கருவுறுதல் எண்ணிக்கை பல மடங்கு அதிரித்துள்ளதாக சமூக வலைதளங்களில் புள்ளி விவரங்கள் அடங்கிய பதிவுகள் பகிரப்பட்டுள்ளன. பூம் உண்மை சரிபார்ப்பு நிறுவனம் இதுகுறித்து நடத்திய ஆய்வு பற்றி விரிவாக காணலாம்.

சிலதினங்களுக்கு முன்பு சமூகவலைதளங்களில் புள்ளி விவரம் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்படி கருவுறுதல் விகிதங்களை மதங்களின் அடிப்படையில் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியானது. இதுகுறித்து X இல் பதிவிடப்பட்ட வெவ்வேறு காலகட்டங்களில் இருந்து மதத்தின் அடிப்படையில் மொத்த கருவுறுதல் விகிதங்களை ஒப்பிட்டு, முஸ்லிம்களிடையே தற்போதைய கருவுறுதல் விகிதம் 4.4 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல இந்துக்களின் கருவுறுதல் விகிதம் 1.94 ஆகவும் உள்ளதாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து உண்மையை கண்டறிய பூம் உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது.

உண்மை சரிபார்ப்பு :

பூம் நடத்திய உண்மை சரிபார்ப்பு ஆய்வில் 2019-2021 காலத்தில் எடுக்கப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கை BOOM ஆய்வு செய்தது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட புள்ளிவிவரங்களோடு இந்த தகவல்கள் முரண்படுவதை காண முடிந்தது. அதில் இடம்பெற்ற இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களின் கருவுறுதல் விகிதம் சரியாக இருந்தாலும், முஸ்லிம்களின் கருவுறுதல் விகிதம் 4.4 என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்திய NFHS அறிக்கை முஸ்லிம்களின் கருவுருதல் விகிதம் 2.36 ஆகும் மாறாக 4.4 என்பது தவறானது என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.

1992-1993 தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கையின் முஸ்லீம் கருவுறுதல் விகிதத்தை எடுத்துக்கொண்டு அதனை இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களுக்கான 2019-2021 தரவுகளின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டு இந்த பதிவு பயனர்களை தவறாக வழிநடத்துகிறது என BOOM கண்டறிந்துள்ளது. இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் தற்போதைய கருவுறுதல் விகிதம் முறையே 1.94 மற்றும் 2.36 ஆக உள்ளது, அதே சமயம் சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு தற்போது முறையே 1.61, 1.88, 1.6, 1.39 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களின் சமீபத்திய கருவுறுதல் விகிதம் மற்ற மதங்களை விட அதிகமாக இருந்தாலும், கடந்த கால அறிக்கைகளின் தரவுகளின் பகுப்பாய்வின்படி முஸ்லீம் சமூக மக்களின் கருவுறுதல் விகிதத்தில் பெரிய சரிவை சந்தித்துள்ளதை புள்ளிவிவரங்கள் மூலம் காணமுடிகிறது. ஆனால் முஸ்லிம்களின் கருவுறுதல் விகிதம் அதிகரித்துள்ளதாக திட்டமிட்டே பொய்யாக பரப்பப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

முடிவு :

பிற மதத்தினருடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் முஸ்லிம்களின் கருவுறுதல் எண்ணிக்கை பல மடங்கு அதிரித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் புள்ளி விவரங்கள் போலியானது எனவும் திரித்து பரப்பப்பட்டுள்ளதும் உறுதியாகியுள்ளது.

Note : This story was originally published by ‘BOOM’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Fertility RatehinduIslamophobiaMuslimsNFHSpopulation control bill
Advertisement
Next Article