காஷ்மீர் பிரிவினை குறித்து காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் பேசியதாக பரவும் வீடியோ போலி - இதுகுறித்து Factly கூறுவது என்ன?
This news fact checked by Factly
காலநிலை ஆர்வலரான சோனம் வாங்சுக் காஷ்மீர் மற்றும் இந்தியாவை சீர்குலைக்கும் கருத்துகளை வெளிப்படுத்தியதாகக் கூறும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோ குறித்த உண்மைத் தன்மையை அறிய Factly உண்மை சரிபார்ப்பு நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இது குறித்து விரிவாக காணலாம்.
காலநிலை ஆர்வலரான சோனம் வாங்சுக் பேசிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோயை பகிர்ந்த சில சமூக ஊடகப் பயனர்கள் காலநிலை ஆர்வலரும் தற்போது அரசியல்வாதியாக உருவெடுத்தவருமான சோனம் வாங்சுக் காஷ்மீரின் பொது வாக்கெடுப்பு குறித்து பேசியுள்ளார். இதன் மூலம் அவர் பிரிவினைவாதியாகியுள்ளார் எனக் குறிப்பிட்டிருந்தனர்
அந்த வைரல் வீடியோவில் சோனம் வாங்சுக் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் பேசிய அவர் '..உலகின் எந்தப் பகுதியாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மக்கள் எங்கு வேண்டுமானாலும் செல்ல சுதந்திரம் இருக்க வேண்டும். அதற்குத் தான் தேர்தல்கள் மற்றும் பொதுவாக்கெடுப்புகள் நடத்தப்படுகின்றன. எல்லா மக்களும் ஒரே மாதிரி நினைக்கிறார்கள். ஆனால் காஷ்மீரில் மட்டும் ஏன் அவை நடக்கவில்லை?” என பேசியிருப்பார்.
சமூக வலைதளங்களில் பரவும் வைரல் வீடியோ குறித்து உண்மைத்தன்மையை சரிபார்க்க Factly உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் இந்த வீடியோவின் உண்மையை சரிபார்க்க இந்த வீடியோவின் பொருத்தமான கீ வேர்டை பயன்படுத்தி தேடுதலுக்கு உட்படுத்தியது. இந்த தேடலின் முடிவில் சோனம் வாங்சுக்கின் அசல் முழு நீள நேர்காணலுக்கு கிடைத்தது. இந்த நேர்காணலில் இருந்துதான் வைரல் வீடியோ கிளிப் எடிட் செய்யப்பட்டு பரவியது.
இந்த நேர்காணலின் போது மிகச்சரியாக 14:23 வது நிமிடத்தில் கார்கிலில் உள்ள அரசியல் தலைவரின் ட்வீட்டிற்கு வாங்சுக் பதிலளித்தார். அவர் தெரிவித்ததாவது.. “இதைத்தான் நான் கேட்க விரும்புகிறேன். ஒரு கருத்திற்கு எதிராக மிகச் சிலரே மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பார்கள். ஆனால் முழு பிராந்தியமும், அங்குள்ள மக்களும் ஒரே பார்வையில் இருந்தால் என்ன செய்ய முடியும். மக்களின் கோரிக்கை நிறைவேற வேண்டும் என தீவிரமாக பிரார்த்தனை செய்வோம் மற்றும் கடினமாக உழைப்போம்.
உலகில் எந்தப் பகுதியைச் சார்ந்த மக்களாக இருந்தாலும் சரி, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; எங்கு வேண்டுமானாலும் செல்ல சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதைத்தான் விரும்புவார்கள். அதற்காகத்தான் தேர்தல்கள் மற்றும் பொது வாக்கெடுப்புகள் நடத்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். எல்லா மக்களும் ஒரே மாதிரி நினைக்கிறார்கள் ஆனால் காஷ்மீரில் மட்டும் ஏன் அவை நடைபெறவில்லை” என சோனம் வாங்சுக் பேசியுள்ளார்.
இந்த வீடியோவில் காஷ்மீரை சீர்குலைப்பது அல்லது பாகிஸ்தானின் ஒரு பகுதியாக காஷ்மீர் இருக்க வேண்டும் என காஷ்மீர்கள் மக்கள் விரும்புகிறார்கள் என்று ஒரு இடத்தில் கூட சோனம் வாங்சுக் பேசவில்லை. காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு பற்றி சோனம் வாங்சுக் பேசுவது போல் எடிட் செய்யப்பட்ட வீடியோ தவறாக பகிரப்படுகிறது என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.
முடிவு :
காலநிலை ஆர்வலரான சோனம் வாங்சுக் காஷ்மீர் மற்றும் இந்தியாவை சீர்குலைக்கும் கருத்துகளை வெளிப்படுத்தியதாகக் கூறும் வீடியோ போலியானது. அது திரித்து பரப்பப்படுகிறது. அந்த வீடியோவில் வாங்சுக் காஷ்மீர் பிரிவினை குறித்து எதுவுமே பேசவில்லை என்பது ஆதாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது
Note : This story was originally published by Factly and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.