போலி கல்வி சான்றிதழ் புகார் : நைஜீரியாவில் அமைச்சர் ராஜினாமா
நைஜீரியாவில் போலி கல்வி சான்றிதழ் தொடர்பான புகாரை தொடர்ந்து அந்நாட்டு தொழில்நுட்ப அமைச்சர் பதவி விலகியுள்ளார்.
08:57 PM Oct 08, 2025 IST
|
Web Editor
Advertisement
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஜனாதிபதி போலா அகமது டிபுனு தலைமயிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டிபுனுவின் அமைச்சரவையில் தொழில்நுட்ப அமைச்சராக உச்சே நிஜி என்பவர் உள்ளார்.
Advertisement
இந்த நிலையில் நிஜி கடந்த 2023 ஆம் ஆண்டு தனது அமைச்சர் பதவிக்கான நியமனத்தின் போது போலியான கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக தனியார் செய்தித்தாள் ஒன்று குற்றம் சாட்டியது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த நிஜி, நைஜீரியாவின் Nsukka (UNN) பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல்/உயிர் வேதியியலில் பட்டம் பெற்றதாக தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டை கையில் எடுத்த எதிர்கட்சியினர் நிஜி பதவி விலக வேண்டும் என்று அவர் மீது சுயாதினமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில் உச்சே நிஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Next Article