For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோஷ்டி மோதல் - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்!

மாணவர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 
01:11 PM Aug 29, 2025 IST | Web Editor
மாணவர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் காரணமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 
கோஷ்டி மோதல்   மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்
Advertisement

நெல்லை-தென்காசி நான்கு வழிச்சலையில் பேட்டையை அடுத்த அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக வளாகம் உள்ளது. இங்கு மோட்டார் சைக்கிள்களில் வரும் மாணவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக பல்கலைக்கழகம் நுழைவாயில் அருகில் அனைத்து வாகனங்களுக்கும் பார்க்கிங் வசதி உள்ளது.

Advertisement

இந்நிலையில் வரலாற்று துறையில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவரான தச்சநல்லூர் அடுத்த மணி மூர்த்தீஸ்வரம் வாழ வந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் லட்சுமி நாராயணன் (வயது 18) நேற்று தனது வாகனத்தை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தாமல் கேண்டீன் அருகே எடுத்து சென்றுள்ளார். அப்போது வரலாற்றுத்துறை இரண்டாம் ஆண்டு மாணவர் அருள் முத்துசெல்வன், ல்கலைக்கழக வளாகத்திற்குள் இப்படி மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடாது என்று கூறியுள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இருவரும் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து மோதிக் கொண்டனர். இதில் லட்சுமி நாராயணன், அருள் முத்துசெல்வன் ஆகியோர் காயம் அடைந்த நிலையில் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம்
குறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக மறு உத்தரவு வரும் வரை பல்கலைக்கழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது.

Tags :
Advertisement