#FactCheck | சிங்கத்தின் கூண்டுக்குள் ஒருவர் நுழைந்ததாக வைரலாகும் வீடியோ - தற்போதையதுதானா?
This news Fact Checked by ’India Today’
இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கத்தின் கூண்டுக்குள் இளைஞர் ஒருவர் நுழைந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.
மிருகக்காட்சி சாலையில் நடந்து செல்லும் போது யாராவது ஒரு மிருகத்தின் கைகளில் விழுந்தால், என்ன நடக்கும்? எனக்கூறி இரண்டு நாட்களுக்கு முன்பு தேசிய உயிரியல் பூங்காவில் இந்த சம்பவம் நடந்ததாக வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவைப் பகிர்ந்துள்ள பேஸ்புக் பக்கம் "மிருகக்காட்சி சாலையில் சிங்கக் கூண்டில் பார்வையாளர் உயிரைக் காப்பாற்றும் துணிச்சலான முயற்சிகள் தொடர்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியாவின் தேசிய உயிரியல் பூங்காவில் நடந்த சம்பவம்" என்று பகிரப்பட்டுள்ளது.
உண்மைச் சரிபார்ப்பு :
ஆஜ்தக்கின் உண்மைச் சரிபார்ப்பில் வைரலான வீடியோ சமீபத்தியது அல்ல, என்றும் அவை 2019 ல் வெளியானது என்றும் கண்டறியப்பட்டது. டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வைரலான வீடியோவிலிருந்து ஸ்கிரீன் ஷாட்களை சேகரித்து, அதனை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்துவதியன் மூலம் அதே வீடியோவை பயல் மஹிந்திரா என்ற X பயனர் தனது கணக்கில் இருந்து பகிர்ந்துள்ளதை காணலாம். செப்டம்பர் 10, 2024 அன்று வீடியோவை வெளியிட்ட அவர், இது பழைய வீடியோ என்று எழுதினார். தற்போது அது மீண்டும் வைரலாகி வருகிறது.
மேலும், அந்த வீடியோவில் உள்ள இளைஞன் குடிபோதையில் சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்ததாகவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார். வீடியோ இரண்டு நாட்களுக்கு முந்தையதாக இருக்க முடியாது என்பதும் பழைய வீடியோ என்றும் இதிலிருந்து தெளிவாகிறது.
இந்த செய்தியுடன் தொடர்புடைய சில முக்கிய வார்த்தைகளைத் தேடியதன் மூலம், டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் டெல்லியின் எக்ஸ் தளத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவைக் கண்டோம். இந்த வீடியோ 17 அக்டோபர் 2019 அன்று வெளியிடப்பட்டது, மேலும் இந்த சம்பவம் டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் நடந்ததாக எழுதப்பட்டது.
ஹிந்துஸ்தான் டைம்ஸின் யூடியூப் சேனலில் இது தொடர்பான அறிக்கையை கீழே காணலாம்.
இதேபோல அக்டோபர் 17, 2019 அன்று வெளியான டெக்கான் ஹெரால்டின் செய்தி கிடைத்தது. அந்தச் செய்தியின்படி, பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்த ரெஹான் கான் என்ற 25 வயது இளைஞர் சிங்கக் கூண்டுக்குள் நுழைந்தார். ஆனால் சிங்கம் ரெஹானுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் உயிரியல் பூங்கா ஊழியர்கள் ரெஹானை மீட்டனர். அந்த இளைஞன் மனநிலை சரியில்லாதவர் என்றும் இந்த செய்தியில் எழுதப்பட்டுள்ளது.
அதேபோல அக்டோபர் 18, 2019 அன்று இதே சம்பவம் குறித்து NDTV ஒரு செய்தியை வெளியிட்டது அதில் ரெஹானுக்கு வயது 28 என்றும், பலமுறை தடுத்து நிறுத்தப்பட்டாலும், சிங்கத்தின் கூண்டுக்குள் சென்று அவரை ஆத்திரமூட்டும் வகையில் சைகைகள் செய்யத் தொடங்கினார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு ஒருமுறை அவர் சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்தார். அதன்பிறகு, சிங்கம் அமைதியானதால் ரெஹானை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். இதன் விளைவாக, 2019 ஆம் ஆண்டின் ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் சமீபத்திய உரிமைகோரல்களுடன் பரவுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
முடிவு :
இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கத்தின் கூண்டுக்குள் இளைஞர் ஒருவர் நுழைந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. உண்மை சரிபார்ப்பில் இந்த சம்பவம் இரண்டு நாட்களுக்கு முந்தையது அல்ல என்றும் அக்டோபர் 17, 2019 அன்று டெல்லி உயிரியல் பூங்காவில் நடந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ’India Today’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.