For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#FactCheck | ஷம்ஷாபாத் ஹனுமான் கோயில் நவக்கிரக சிலைகள் சேதம் - மத காரணங்கள் இருப்பதாக பரவும் தகவல் போலியானது!

08:38 AM Nov 15, 2024 IST | Web Editor
 factcheck   ஷம்ஷாபாத் ஹனுமான் கோயில் நவக்கிரக சிலைகள் சேதம்   மத காரணங்கள் இருப்பதாக பரவும் தகவல் போலியானது
Advertisement

This news Fact checked by ‘News meter’
ஷம்ஷாபாத் விமான நிலைய காலனியில் உள்ள ஹனுமான் கோயிலில் இருந்த ஐந்து நவக்கிரக சிலைகள் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இதன் பின்னால் மத காரணங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது தொடர்பாக நியூஸ் மீட்டரின் உண்மை சரிபார்ப்பு ஆய்வு குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

நவம்பர் 5ம் தேதி ஹைதராபாத் புறநகரில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலைய காலனியில் உள்ள ஹனுமான் கோயிலில் இருந்த ஐந்து நவக்கிரக சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக தகவல் பரவியது. அக்கோயிலின் பூசாரி இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அதிகாலையில் நடந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கிக்கப்பட்டது.

மேலும் இச்சம்பவம் குறித்து, உள்ளூர் பாஜக தலைவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து சில வலதுசாரி அமைப்புகள் நவம்பர் 6 அன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில் சிலர் இந்த சம்பவத்தின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இதற்கு மத உள்நோக்கம் இருப்பதாக எழுதினர். விகாஸ் எனும் பெயர் கொண்ட ஒரு X பயனர் இந்த வீடியோவைப் பதிர்ந்து "காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஹைதரபாத்தில் உள்ள இந்து கோயில் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது” என எழுதினார்.

உண்மை சரிபார்ப்பு :

ஹனுமான் கோயிலில் இருந்த ஐந்து நவக்கிரக சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக நியூஸ்மீட்டர் உண்மை சரிபார்ப்புக்கு உட்படுத்தியது. இந்த பதிவில் உள்ள முக்கிய வார்த்தைகளைத் தேடியபோது, 'தி இந்து நாளிதழில் வெளியான 'ஷம்ஷாபாத் ஹனுமான் கோயிலில் சிலையை சேதப்படுத்திய முதியவர் ' என்ற தலைப்பில் செய்தியைக் காண முடிந்தது.

தி இந்துவின் செய்தியின்படி , ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலைய (ஆர்ஜிஐஏ) போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக 56 வயதான கோர்பால் என்ற முதியவரை கைது செய்துள்ளனர். மெலும் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதேபோல மற்றொரு ஊடக நிறுவனமும் இதே விஷயத்தை 'ஹைதராபாத் ஹனுமான் கோயில் சிலை சேதம் : 50 வயதான உ.பி. நபர் “ எனௌம் தலைப்பில் ஷம்ஷாபாத்தில் நவக்கிரக சிலைகளை சேதப்படுத்தியதை அடுத்து கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட முதியவர் உத்தரபிரதேச மாநிலம் சிர்புரா மாவட்டத்தில் உள்ள டான்சிங்பூர் கிராமத்தை சேர்ந்தவர் என போலீசார் கண்டறிந்துள்ளனர். அவர் ஸ்ரீபுத்ரி லால் கணபதி சிங் என்ற நபரின் மகன் என்றும் சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

மேலும் இதுதொடர்பாக ஷம்ஷாபாத் ஏசிபி கே ஸ்ரீனிவாஸ் ராவிடம் நியூஸ்மீட்டர் செய்தி நிறுவனத்தில் இருந்து தொலைபேசியில் பேசியபோது, கோர்பால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தின் பின்னணியில் எந்த மதரீதியான நோக்கமும் இல்லை என்றும் கூறினார். எனவே, ஷம்ஷாபாத் நவகிரக கோவிலை சேதப்படுத்தியதில் எந்தவித மத காரணங்களும் இல்லை என்றும் இது அடிப்படை ஆதாரமற்றது என்றும் உறுதியாகியுள்ளது.

முடிவு :

ஹனுமான் கோயிலில் இருந்த ஐந்து நவக்கிரக சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக உபி மாநிலத்தை சார்ந்த ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே இந்த சம்பவத்தில் மத காரணங்கள் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

Note : This story was originally published by ‘News meter’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement