For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#FactCheck | வயநாடு மக்களை கவர்வதற்காக பிரியங்கா காந்தி சிலுவை மாலை அணிந்தாரா ? - உண்மை என்ன?

12:35 PM Nov 15, 2024 IST | Web Editor
 factcheck   வயநாடு மக்களை கவர்வதற்காக பிரியங்கா காந்தி சிலுவை மாலை அணிந்தாரா     உண்மை என்ன
Advertisement

This news Fact checked by ‘News meter’

Advertisement

வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாக்காளர்களை கவர்வதற்காக கழுத்தில் சிலுவை மாலையை அணிந்ததாக சமூக வலைதளங்களில் படங்கள் வைரலானது. இதுகுறித்து நியூஸ் மீட்டர் நடத்திய உண்மை சரிபார்ப்பு ஆய்வை விரிவாக காணலாம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார்.இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நவம்பர் 13ம் தேதி நடைபெற்ற தேர்தலில்  62.39% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வயநாடு தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி வாக்காளர்களை கவர்வதற்கா கழுத்தில் சிலுவை மாலை அணிந்ததாக சமூக வலைதளங்களில் படங்கள் வைரலானது. மேலும் காசிக்கு சென்றால் ருத்திராட்சை, கேரளாவுக்கு சென்றால் சிலுவை என சில சமூக வலைதள பதிவர்கள் பதிவிட்டனர். இதுகுறித்து உண்மைத் தன்மையை கண்டறிய நியூஸ் மீட்டர் ஆய்வுக்கு உட்படுத்தியது.

உண்மை சரிபார்ப்பு

பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரத்தில் சிலுவை அணிந்ததாக பரவிய படங்களை நியூஸ்மீட்டர் கூகுள் ரிவர்ஸ் இமெஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது பிப்ரவரி 17, 2017 அன்று கெட்டி இமேஜஸ் வெளியிட்ட படத்தைக் காண முடிந்தது. அதில் பிரியங்கா காந்தி ஒரு ஓவல் வடிவ பதக்கத்தை அணிந்திருந்திருக்கும் உண்மைப் ப்டம் கிடைத்தது. இதன் மூலம் பிரியங்கா காந்தி கிறிஸ்தவ சிலுவை அணியவில்லை என்பது தெளிவாகிறது. மேலும் இப்படத்தை மார்ஃபிங் செய்து சிலுவை படம் இணைத்துள்ளதுள் கண்டுபிடிக்கப்பட்டது. இப்படம் பிப்ரவரி 17, 2017 அன்று ரேபரேலியில் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தபோது எடுக்கப்பட்டதாகும். 2019 இல் HuffPost மற்றும் 2021 இல் நேஷனல் ஹெரால்டு ஆகியவற்றில் இந்த உண்மை படம் வெளியாகியுள்ளது.

இதேபோல ருத்ராட்சத்துடன் கூடிய படத்தையும் கூகுள் ரிவர்ஸ் தேடலுக்கு உட்படுத்தியபோது மார்ச் 20, 2019 அன்று இந்தியா டிவியால் வெளியிடப்பட்ட வீடியோ கிடைத்தது. அதில் 'பிரியங்கா காந்தியின் கங்கா யாத்திரையின் இந்தியா டிவி பிரத்யேக நிகழ்ச்சி' என்ற தலைப்பில் காண முடிந்தது. அந்த வீடியோவில் பிரியங்கா அதேபோன்ற சேலையை அணிந்து ருத்ராட்சத்தை அணிந்திருப்பது உறுதியாகியுள்ளது.

முடிவு :

வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாக்காளர்களை கவர்வதற்காக கழுத்தில் சிலுவை மாலையை அணிந்ததாக சமூக வலைதளங்களில் வைரலான படங்கள் போலியானது என்றும் அவை திரித்து வெளியிட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Note : This story was originally published by ‘News meter’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement