For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜி.யு போப் எழுதிய புத்தகத்தில் காவி உடையில் திருவள்ளுவரா? உண்மை என்ன?

09:57 PM May 31, 2024 IST | Web Editor
ஜி யு போப் எழுதிய புத்தகத்தில் காவி உடையில் திருவள்ளுவரா  உண்மை என்ன
Advertisement

This News Fact Checked by ‘Newschecker’

Advertisement

'ஜி.யு போப் எழுதிய புத்தக்கத்தில் காவி உடையில் திருவள்ளுவர்' என பரவி வரும்  தகவலின் உண்மைத் தன்மை குறித்து Newschecker சார்பில் ஆய்வு செய்யப்பட்டு  தவறானது என தெரியபடுத்தி உள்ளனர்.

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும்  ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர்,  பொய்யில் புலவர் என கூறப்படும் திருவள்ளுவர்.  உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் அளூநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜகவினர் உள்பட சிலர் திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பொதுவெளியில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அந்த வகையில், தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த செய்தி தாள் ஒன்று ஜி.யு. போப் புத்தகத்தில் திருவள்ளுவர் காவி உடை இருப்பது போல் புகைபடத்தை வெளியிட்டதாக சமூக வலைதள பக்கங்களில் பரப்பப்பட்டது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில்,  அதன் உண்மைத்தன்மைக் குறித்து அறிய NEWSCHECKER  ஆய்வு செய்தது.

ஆய்வின் முடிவில், இந்த புத்தகத்தை ஜி.யு.போப் எழுதவில்லை. மேலும், சுப்ரமுனிய சுவாமிகள் என்பவரால்  எழுதப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் படத்தை ஓவியர் எஸ்.ராஜம் வரைந்ததாகும். இதனை, எஸ். ராஜமின் மருமகன் இதை உறுதிப்படுத்தி உள்ளார். அதன் பதிப்புரை பக்கத்தில் “The cover art and the image of lord murugan opposite the title page are by Thiru. S. Rajam of Chennai.”  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியில், ஜியு போப் எழுதிய புத்தகத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுவதாக பரவிய செய்தி தவறானது என்பது ஆய்வின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

Note : This story was originally published by ‘Newschecker’ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement