For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா மலர் கண்காட்சி - சுற்றுலா பயணிகள் பார்வையிட கூடுதல் நேரம்!

06:57 PM May 18, 2024 IST | Web Editor
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா மலர் கண்காட்சி   சுற்றுலா பயணிகள் பார்வையிட கூடுதல் நேரம்
Advertisement

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 17ம் தேதி காலை 8 மணியளவில் தொடங்கியது. ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த கிளி, டெடி பியர், மயில், காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட கிங் காங் குரங்கு, டிராகன், பாண்டா கரடி ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

இந்த மலர்க் கண்காட்சியில் ஆந்தோரியம், பேன்சி, டைந்தேஷ், ஜெர்பரா, கிங் ஆஸ்டர், மேரி கோல்டு, கல்ரோஜா, லில்லியம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வண்ண மலர்களும், மலைப் பகுதிகளில் விளையக் கூடிய வாழை, பலா, ஆரஞ்சு, காய்கறிகளான பீன்ஸ், பீட்ரூட், முள்ளங்கி, கேரட் உள்ளிட்டவையும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள் : “டெல்லி பாஜக தலைமை அலுவலகம் முற்றுகை” – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

இந்நிலையில் பிரையண்ட் பூங்காவை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி வழக்கமான நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இருந்த பார்வையாளர் நேரம், தற்போது காலை 7 மணி முதல் மாலை 7 மணி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோடை விழாவுக்காக மூன்று மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் முதல் முறையாக 10 நாட்கள் மலர்க் கண்காட்சி நடைபெறுகிறது.

Tags :
Advertisement