"பாகிஸ்தானுடன் தடையற்ற பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான காலம் முடிந்துவிட்டது" - வெளியுறவு அமைச்சர் #Jaishankar பேச்சு!
பாகிஸ்தானுடன் தடையற்ற பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான காலம் முடிந்து விட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
"பாகிஸ்தானுடன் தடையற்ற பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான காலம் முடிந்துவிட்டதாகவே கருதுகிறேன். ஒவ்வொரு செயலுக்கும் பின்விளைவுகள் உள்ளன. ஜம்மு-காஷ்மீரை பொருத்தவரை, அந்த யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-ஆவது சட்டப் பிரிவு முடிந்து போன விவகாரமாகும். எனவே இனி பாகிஸ்தானுடன் என்ன மாதிரியான உறவைப் பராமரிக்கலாம் என்பதே தற்போதைய கேள்வி.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டிற்கு 2 புதிய #VandeBharat ரயில் சேவை! இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
பாகிஸ்தான் உடனான உறவைப் பொறுத்த வரை, தற்போதுள்ள நிலையை தொடர்வதில் இந்தியா திருப்தி அடையலாம் என்று ராஜீவ் சிக்ரி தனது புத்தகத்தில் பரிந்துரைத்துள்ளார். சில நேரங்களில் ஆம் என்றும், சில நேரங்களில் இல்லை என்றும் இதற்கு பதில் சொல்லலாம். அமைதியாக இருப்பவர்கள் அல்ல நாங்கள். நிகழ்வுகள் நேர்மறையாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் அதற்கு நாங்கள் எதிர்வினையாற்றுவோம்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.