Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரசு சட்டக் கல்லூரி பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

அரசு சட்டக் கல்லூரிகளில் இணை, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
05:11 PM Mar 03, 2025 IST | Web Editor
Advertisement

அரசு சட்டக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர், இணை பேராசிரியர் நேரடி நியமன போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டு இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

Advertisement

இந்நிலையில், அரசு சட்டக் கல்லூரிகளில் இணை, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 3ஆம் தேதியிலிருந்து மார்ச் -18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

“ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு சட்டக் கல்லூரி இணைப் பேராசிரியர். உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 01 / 2025, நாள். 24.01.2025 வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 03.03.2025 லிருந்து 18.03.2025 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Deadline ExtensionGovernment Law Collegeprofessors
Advertisement
Next Article