For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மணிப்பூரில் ஆயுத ஒப்படைப்புக்கு காலக்கெடு நீட்டிப்பு - ஆளுநர் அஜய் குமார் பல்லா உத்தரவு !

மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் அஜய் குமார் பல்லா தெரிவித்துள்ளார்.
04:24 PM Feb 28, 2025 IST | Web Editor
மணிப்பூரில் ஆயுத ஒப்படைப்புக்கு காலக்கெடு நீட்டிப்பு   ஆளுநர் அஜய் குமார் பல்லா உத்தரவு
Advertisement

மணிப்பூரில் கடந்த பிப். 13 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. இங்கு கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்களின்போது காவல் துறை, பாதுகாப்புப் படையினரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

Advertisement

இது குறித்து மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா கடந்த 20-ஆம் தேதி, மக்கள் தங்களிடம் சட்டவிரோதமாக வைத்துள்ள ஆயுதங்களை 7 நாள்களுக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் தாமாக முன்வந்து ஆயுதங்களை ஒப்படைப்பவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டது என்றும் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு ஆயுதங்களை மக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த 7 நாள்களுக்குள் 300க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆயுதங்களை தாமாக முன்வந்து ஒப்படைப்பதற்கான ஏழு நாள் காலக்கெடு முடிவடைந்தது. பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து இதற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கைகள் வந்துள்ளன.

கோரிக்கைகளை பரிசீலனை செய்து வருகிற மார்ச் 6 ஆம் தேதி மாலை 4 மணி வரை காலக்கெடுவை நீட்டிக்க முடிவு செய்துள்ளேன். இந்த காலகட்டத்திற்குள் ஆயுதங்களை ஒப்படைப்பவர்களுக்கு எதிராக எந்த தண்டனை நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அவர் மீண்டும் உறுதியளித்துள்ளார்.

Tags :
Advertisement