#Aadhaar-ஐ கட்டணமின்றி புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!
ஆதாரை கட்டணமின்றி புதுப்பிக்க வரும் டிசம்பர் 14-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு தொடங்குவது முதல் பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளை பெற ஆதார் கார்டு கட்டாயமாக கேட்கப்பட்டு வருகிறது. ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. இதற்க்கு காரணம், சிலர் தங்களது முகவரி மற்றும் செல்போன் எண்களை மாற்றி இருப்பார்கள்.
முகங்கள் மாறி இருக்கும், அனைத்திற்கு மேலாக கைரேகை மாறி இருந்தால், ரேஷன் கடை, வங்கிகள் மற்றும் சிம்கார்டு வாங்கும் இடங்களில் சுயசான்று செய்வதில் பிரச்னை ஏற்படும். இதனை தவிர்க்க 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் ஆதார் புதுப்பிக்க வருகிற 14ம் தேதி வரை தான் கால அவகாசம் என்று ஒரு ஆதாரமற்ற தகவல் பரவ, இ-சேவை மையம் மற்றும் ஆதார் மையங்களில் மக்கள் குவிய தொடங்கினர்.
இந்நிலையில், ஆதாரை புதுப்பிக்க வரும் டிசம்பர் 14 வரை கால அவகாசம் நீட்டித்து ஆதார ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 55 லட்சம் பேர் ஆதார் தகவலை புதுப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.