சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 6 பேர் உயிரிழப்பு!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சி
பொம்மையாபுரம் கிராமத்தில், பாலாஜி என்பவருக்கு சொந்தமான சாய்நாத் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் பட்டாசு தயாரிக்க பயன்படும் ரசாயன கலவை செய்தபோது, வேதியியல் மாற்றம் மற்றும் உராய்வு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் 4 அறைகள் தரைமட்டமானது. விபத்தில் வேல்முருகன், நாகராஜ், கண்ணன், காமராஜ், சிவகுமார், மீனாட்சிசுந்தரம் ஆகிய 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் 90% தீக்காயத்துடன் மீட்கப்பட்டு விருதுநகர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து சாத்தூர், சிவகாசி, விருதுநகர் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.