For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'கூலி' திரைப்படத்தில் இணையும் பான் இந்திய நடிகர்? ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு!

02:38 PM Aug 03, 2024 IST | Web Editor
 கூலி  திரைப்படத்தில் இணையும் பான் இந்திய நடிகர்  ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு
Advertisement

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படத்தின் புதிதாக இணையவுள்ள நட்சத்திர நடிகர் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Advertisement

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ‘கூலி’  என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், நாசர் மற்றும் அபிராமி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள் : ‘எலான் மஸ்கின் குழந்தைகளுடன் பிரதமர் மோடி’.. இணையத்தில் வைரலாகும் பழைய புகைப்படம்!

இதற்கிடையே, திரைப்படத்தின் நாடு முழுவதுமான வணிகத்திற்காக பிற மொழி நட்சத்திர நடிகர்களை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் முயன்று வருவதாகத் தகவல் வெளியானது. முக்கியமாக, 'கூலி' திரைப்படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அவர் மறுத்ததாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து, 'கூலி' திரைப்படத்தில் புதிதாக இணைய உள்ள அந்த நட்சத்திர நடிகர் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Tags :
Advertisement