For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கல்வி எவ்வளவு முக்கியமோ அதே போல உடற்பயிற்சியும் விளையாட்டும் முக்கியம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

10:28 AM Aug 05, 2024 IST | Web Editor
கல்வி எவ்வளவு முக்கியமோ அதே போல உடற்பயிற்சியும் விளையாட்டும் முக்கியம்   அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Advertisement

கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோல உடற்பயிற்சியும் விளையாட்டும் முக்கியம் என  நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

Advertisement

சென்னை பெரியமேடில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவ மாணவியர் மற்றும் 2023- 2024 ஆம் கல்வியாண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

இந்நிகழ்வில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி, மேலாண்மை இயக்குனர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பொ சங்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசியதாவது..

” பதக்கங்களை வென்ற மாணவ மாணவிகளுக்கும், 100% தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் இந்த விழாவில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். திராவிட இயக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு தொண்டனுக்கும் படிக்கும் மாணவனை பார்த்தால் ஒரு மகிழ்ச்சி இருக்கும்.

மாணவிகள் பள்ளிக்கு நடந்து போவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார் பெரியார். மாணவிகள் பள்ளிக்கு நடந்து போக கூடாது என்று பஸ் பாஸ் கொடுத்து பேருந்தில் போக வைத்தவர் கலைஞர். பெரியாருக்கும் கலைஞருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி தான்
எங்கள் அத்தனை பேருக்கும் ஏற்படுகிறது.

திராவிட மாடல் ஆட்சியில் கல்வியில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு தனியார் பள்ளிகள் அளிக்கும் ஒத்துழைப்பு மிக மிக முக்கியம். நாளை தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு போட்டிகளை கலந்துகொண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும் அதற்காக அத்தனையும் தர தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது.

திறமைகளை வளர்த்துக்கொள்ள மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும். உண்மையான கல்வி பாடத்தை புரிந்து கொண்டு படிக்க வேண்டும். விரைவில் கோவையிலும் திருச்சியிலும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைய உள்ளது. ஆர்.டி.ஐ சட்டத்தை செயல்படுத்துவதில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

முதல்முறையாக கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்தது. ஆசியர்கள் விளையாட்டுப் பீரியடை கடன் வாங்கி வேறு வகுப்பை நடத்த வேண்டாம். கல்வி எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு உடற்பயிற்சி விளையாட்டு முக்கியம். விளையாட்டு பீரியடை கடன் வாங்காதீர்கள் என்று  கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களை கேட்டுக் கொள்கிறேன்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement