Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாடாளுமன்றத் தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணி? வரும் 12-ம் தேதி முடிவு என ஜி.கே.வாசன் பேட்டி!

03:25 PM Feb 03, 2024 IST | Web Editor
Advertisement

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன்  கூட்டணி என்பது குறித்து வரும் 12-ம் தேதி முடிவு செய்யப்படும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தெரிவித்துள்ளார். 

Advertisement

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில அணித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,  கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு முன்னதாக கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:

"அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவருடைய வீட்டில் நேற்று சந்தித்து பேசினேன்.  பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையிடம் தொலைபேசி மூலம் நேற்று முன்தினம் பேசினேன்.  பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை கூட சந்தித்து பேசினேன்.  நாளை மறுதினம் பாமக அன்புமணி ராமதாஸை சந்தித்து பேச உள்ளேன்.

தமிழ் மாநில காங்கிரஸை பொறுத்த வரை அனைத்து கட்சிகளுடன் நட்புரீதியாக தான்
பழகி வருகிறோம். நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகின்றன. தேர்தல் கூட்டணி வேட்பாளர் என முக்கிய அறிவிப்புகள் பொதுக்குழுவில்
ஆலோசிக்கப்படும்.  தேர்தல் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் என அனைவரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்ட பிறகு தான் ஒரு முடிவு எடுக்கப்படும்.

கட்சியின் பொதுக்குழு நடைபெற்ற பிறகு அனைத்து மாவட்ட தலைவர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு தான் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.  வரும் 12-ம் தேதி சென்னையில் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.  யார் யார் எந்த கட்சியின் கூட்டணியில் சேர்வார்கள் என்பது அந்தந்த பொதுக்குழுவில் தீர்மானிக்கப்படும். அதுபோல நாங்களும் பொது குழுவில் ஆலோசிக்கப்பட்டு தான் சரியான நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம்.

நான் முக்கிய தலைவர்களை சந்தித்தது என்பது தேர்தலுக்காக சந்தித்தது என்பதை விட
தொடர்ந்து நான் பல்வேறு கட்சி தலைவர்களை பார்த்து வருகிறேன் என்பது தான்
நிதர்சன உண்மை.  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டாவது முறையாக சந்தித்துள்ளேன். இது பெரும்பாலும் யாருக்கும் தெரியவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இருப்பதால் நான் அதிகமான அரசியல் தலைவர்களை
சந்தித்து வருகிறேன்.  அது வழக்கமான ஒன்றுதான்.  கூட்டணி பொருத்தவரை நான் மட்டும்
முடிவு செய்ய முடியாது எல்லா மாவட்டத் தலைவர்கள் உறுப்பினர்கள் எல்லோரிடமும்
ஆலோசிக்கப்பட்டு தான் பிறகு தெரிவிக்க முடியும்.  செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் என்ன கருத்து தெரிவிக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:  “விஜயகாந்த் வழியில் விஜய் பயணிக்கவில்லை” – இயக்குநர் பேரரசு நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

அதுதான் நான் செயல்படுத்த முடியும்.  தமிழ் மாநில காங்கிரஸ் பொருத்தவரை மதச் சார்பு மற்றும் மதவாதம் எதுவும் கூற மாட்டோம்.  மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான கட்சி தமிழ் மாநில காங்கிரஸ்.  குறிப்பாக சிறுபான்மையினருக்கா எங்கள் கட்சி உழைத்து கொண்டே இருக்கும்.  அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபடும்.

தமிழ் மாநில காங்கிரஸ் பொறுத்தவரை கூட்டணி தர்மத்தை மதிக்கின்ற கட்சி.  எங்கள் கட்சிப் பொறுத்தவரை ஒரு தொகுதிக்கு மேல் நிற்கக்கூடிய சக்தி உள்ளது. தேர்தல் நெருங்க, நெருங்க அதற்கான வியூகங்கள் தொடங்கப்படும்.

ஜனநாயகத்தைப் பொறுத்தவரை வாக்காளர்களான பொதுமக்கள் தான் எஜமானர்கள். அந்த நிலையில்  'தமிழக வெற்றி கழகம்'  கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய்-யின் பணி சிறக்க தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகள். நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது கட்சியின் வியூகங்கள். அது அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.  ஊழலும் வறுமையும் தமிழகத்தில் இருந்து வருகிறது.

இரண்டரை வருட காலத்திலே கொடுத்த வாக்குறுதிகளை பெரும்பாலான வகையில்
நிறைவேற்றாத அரசு திமுக அரசாக செயல்பட்டு வருகிறது.  சட்டஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.  வெளிப்படைத்தன்மை இல்லாத ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

மத்திய இடைக்கால பட்ஜெட் என்பது தமிழகத்திற்கு பெருசாக தேவை பூர்த்தி செய்யவில்லை.  தமிழக அரசின் மீது மத்திய அரசுக்கு எந்த நம்பிக்கை இல்லாமல் இருப்பதால் தான் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது.  அதனை தமிழ் மாநில காங்கிரஸ் கண்டித்தது.  மதுபான கடைகளை குறைக்க வேண்டும் என்று கேட்டால் மதுபானங்களின் விலையை அதிகரித்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
ADMKBJPDMKEdappadi palanisamyelection 2024Election2024GK vasanParliament Electiontamil maanila congressTMC
Advertisement
Next Article