Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பரபரப்பான பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடக்கம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.!

06:36 AM Jan 16, 2024 IST | Web Editor
Advertisement

உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்க உள்ளதால் பாலமேட்டில் நிகழ்ச்சி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. அந்த வகையில், இந்தாண்டு ஜனவரி 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு வெற்றிகரமாக நடைபெற்று 17 காளைகளை அடக்கிய கார்த்திக்கிற்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் வேலு என்கிற காளை சிறந்த காளையாக அறிவிக்கப்பட்டு அதன் உரிமையாளர் ஜி.ஆர்.கார்த்திக்கிற்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.


இந்த நிலையில் உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு மேல் வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்க 1,000 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களுக்கும்ஆன்லைன் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது ஆன்லைன் டோக்கன்பெற்ற மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு மறு மருத்துவபரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படும்.

பாலமேடு மஞ்சமலையாற்றில் உள்ள நிரந்தர வாடிவாசல், ஆடுகளம், பார்வையாளர்கள் மாடங்களில் 2 அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.  போட்டியில் முதல் இடத்தில் சிறப்பாக களம் காணும் காளைக்கு முதல் பரிசாக ஒரு நிசான் கார் மற்றும் மாடுபிடி வீரருக்கு ஒரு நிசான் கார் வழங்கபடுகிறது.

2 வது சிறந்த களம் காணும் காளைக்கு, கன்றுடன் கூடிய காங்கேயம் நாட்டு பசுமாடும், 2 ஆம் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு Apache பைக் பரிசும் வழங்கப்படவுள்ளது. போட்டியின்போது சிறப்பாக களம்கண்டு காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், சிறப்பாக களமாடும் காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் முதல் பிரிட்ஜ், டிவி, கட்டில், சைக்கிள், அண்டா, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.

போட்டியை பார்வையிடும் பார்வையாளர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்துள்ளது. போட்டியினை பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகம் நடத்துகிறது. போட்டியில் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்க்ரே பிரவின் உமேஷ் தலைமையில் 1500 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவக்குழுக்கள், காளைகளுக்கான மருத்துவக்குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு நிலைய வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  காளைகள் வாடிவாசலுக்கு வரும் பிறவாடி பகுதிகளிலும், காளைகள் வாடிவாசலில் இருந்து செல்லும் காளை சேகரிப்பு இடத்தில் ( கலெக்சன் பாயிண்ட்) காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நீண்ட நெடிய ஜல்லிக்கட்டு களம் என்பதால் போட்டியை காண்பதற்கு பார்வையாளர்களுக்கு சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டி தொடந்து காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.

Tags :
பொங்கல்பொங்கல் 2024பாலமேடு ஜல்லிக்கட்டுஜல்லிக்கட்டுJallikatttu 2024JallikattuPalameduPalamedu JallikattuPongalPongal 2024
Advertisement
Next Article