பெட்ரோல் டீசலுக்கான கலால் வரி ரூ.2 உயர்வு - பெட்ரோல் விலையும் உயருமா?
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினம்தோறும் நிர்ணயிக்கப்படும். இந்த நடைமுறையைத்தான் எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
‘சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ப்ல மாதங்களாக மக்களிடையே நிலவி வருகிறது. ஆனாலும் கூட ‘கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தும் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததால், எண்ணெய் நிறுவனங்கள் 2023ம் ஆண்டின் கடைசி 6 மாதங்களில் ரூ. 1.32 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளதாகவும் இதனால் சாமானிய மக்கள் மீது சுமை திணிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
2024ம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சியமைத்தது. இதனைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் பெட்ரோல் டீசல் மற்றும் ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மேலும் ரூ.2 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிந்துள்ள நிலையில் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பெரிய அளவில் உயராது என சொல்லப்படுகிறது