Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் - கோரிக்கைக்கு இணங்கியது RRB!

தமிழ்நாடு தேர்வர்களின் கோரிக்கையை ஏற்ற RRB, CBT 2 தேர்வுக்கான தேர்வு மையங்களை தமிழ்நாட்டிலேயே அமைத்துள்ளது.
09:17 PM Apr 22, 2025 IST | Web Editor
Advertisement

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் உதவி லோகோ பைலட் பணிக்கு தமிழ்நாட்டிலிருந்த 493 காலிப்பணியிடங்களுக்கு முதற்கட்டமாக கடந்த நவம்பரில் தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட CBT 1 கணினி முறை தேர்வில் 6315 பேர் தேர்ச்சி பெற்றனர்.

Advertisement

தொடர்ந்து கடந்த மார்ச் 19 அன்று நடைபெறவிருந்த CBT 2 எனப்படும் இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்வு மையங்கள் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் அமைக்கப்பட்டதால் தேர்வாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வு மையங்களை தமிழ்நாட்டுக்கு மாற்றுமாறு தேர்வர்கள் வைத்த கோரிக்கையை ஏற்காத ரயில்வே வாரியம், தேர்வு நாளன்று திடீரென முன்னறிவிப்பின்றி தொழில்நுட்ப காரணங்களால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவித்தததால் தேவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

மறு தேர்வுக்கான மையங்களை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்திருந்த சூழலில், மே 2 அன்று நடைபெறும் என அறிவித்திருந்த ரயில்வே வாரியம், தேர்வு மையங்களையும் தமிழ்நாட்டிலேயே  அமைத்துள்ளது. தமிழ்நாட்டு தேர்வர்கள் அனைவருக்கும் அவரவருக்கு அருகிலுள்ள மாவட்டங்களிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Tags :
CBT 2 ExamExamination centersRRB'
Advertisement
Next Article