For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Exam: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 65 லட்சம் மாணவர்கள் தோல்வி!

08:13 AM Aug 22, 2024 IST | Web Editor
 exam  10  12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 65 லட்சம் மாணவர்கள் தோல்வி
Advertisement

கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் நாடு முழுவதும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

Advertisement

கடந்த, 2023 - 24 கல்வியாண்டில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பற்றி மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது;

நாடு முழுதும் 56 மாநில கல்வி வாரியங்கள், மூன்று தேசிய கல்வி வாரியங்கள் என மொத்தம் 59 பள்ளி வாரியங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், 2023 - 24 கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகளை ஆய்வு செய்தோம்.

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வை, மாணவியர் அதிகளவு எழுதியுள்ளனர். ஆனால், தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இது நேர்மாறாக உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 33.5 லட்சம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். இதில், 5.5 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை. 28 லட்சம் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். உயர்க்கல்வி படிக்கும் மாணவர்களின் விகிதம் குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக கருதுகிறோம்.

இதேபோல் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 32.4 லட்சம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். இதில், 5.2 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை. 27.2 லட்சம் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். 10ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ.,யில் 6 சதவீத பேர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர். ஆனால், மாநில கல்வி வாரியத்தில் 16 சதவீத மாணவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி விகிதம் மத்திய கல்வி வாரியத்தில் 12 சதவீதமாகவும், மாநில கல்வி வாரியத்தில் 18 சதவீதமாகவும் உள்ளது. மாநில அளவில், 10ம் வகுப்பில் மத்திய பிரதேசத்திலும், 12ம் வகுப்பில் உத்தர பிரதேசத்திலும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

முந்தைய கல்வியாண்டை ஒப்பிடுகையில், 2023ம் ஆண்டில் மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் குறைந்துள்ளது. எனினும், தேர்ச்சி சதவீதத்தில் மாணவியர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்” என தெரிவித்தனர்.

Tags :
Advertisement