"தென்மாவட்டங்களில் சாதிப்படுகொலைகளை தடுக்க வேண்டும்" - இயக்குநர் மாரி செல்வராஜ்!
தென் மாவட்டங்களில் சாதி கொலைகளை தடுக்க அனைவரும் இணைந்து
மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்தார்.
தென் மாவட்டங்களில் உளவியல்ரீதியாக அனைத்து பொதுமக்களின் மனதிலும் சாதி உள்ளது என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்தார். இது தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :
"தற்போது 'பைசன்' என்ற பெயரில் விளையாட்டை மையமாக வைத்து ஒரு திரைப்படத்தை எடுத்து வருகிறேன். இந்த திரைப்படத்தின் கதைக்களம் சில உண்மை சம்பவம் மற்றும் சில கற்பனை சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகும்.
தென் மாவட்டங்களில் உளவியல்ரீதியாக அனைத்து பொதுமக்கள் மனதிலும் சாதி உள்ளது. இதனை ஒரே நாளில் மாற்ற முடியாது.எல்லோரும் சேர்ந்து ஒன்றாக சேர்ந்து நுணுக்கமாக கலைத்துறை, அரசியல் உள்ளிட்டவைகளின் மூலம் அழுத்தமான வேலையை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அப்படி செய்தால் தான் அடுத்த தலைமுறையில் மாற்றம் வரும். புரிதலுக்கு உள்ளாகும்"
இவ்வாறு இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : “பெண்களின் புகைப்படங்களை தவறான முறையில் சித்தரிப்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரான குற்றம்” – நீதிபதி கருத்து!
திரைப்படங்கள் ott-யில் வெளியாவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் கூறியதாவது : "அனைவரும் வீட்டிலும் பூஜை அறை உள்ளது. இருந்த போதிலும், கோயிலுக்கு சென்று தான் சாமி கும்பிடுகிறார்கள். அதேபோல் அனைவரும் ஒன்றிணைந்து திரைப்படம் பார்ப்பது திரையரங்கில் தான். அது என்றும் மாறாது" என தெரிவித்தார்.
இதையடுத்து, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் கூறியதாவது : "அரசியலுக்கு அனைவரும் வரலாம்" என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்தார்.