For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘12th Fail’ படத்தை தொடங்குவதற்கு முன்பே பயமுறுத்தினர்..! - இயக்குநர் விது வினோத் சோப்ரா பேச்சு..!

05:20 PM Feb 04, 2024 IST | Web Editor
‘12th fail’ படத்தை தொடங்குவதற்கு முன்பே பயமுறுத்தினர்      இயக்குநர் விது வினோத் சோப்ரா பேச்சு
Advertisement

‘12th Fail’  திரைப்படத்தை தொடங்குவதற்கு முன்பே, ஐபிஎஸ் மனோஜ் குமார் ஷர்மாவை பற்றிய திரைப்படம் எடுப்பது குறித்து சிலர் பயமுறுத்தியதாக இயக்குநர் விது வினோத் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தியில் கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி வெளியான திரைப்படம் '12th Fail'. இந்த திரைப்படத்தை விது வினோத் சோப்ரா இயக்கியுள்ளார். தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, மேதா சங்கர், அன்ஷுமன் புஷ்கர், அனந்த் விஜய் ஜோஷி, கீதா அகர்வால், ஹரிஷ் கண்ணா, சரிதா ஜோஷி, விகாஸ் திவ்யாகீர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இதையும் படியுங்கள் ; தேர்தல் அறிக்கையை தயாரிக்க பொதுமக்கள் பரிந்துரைகளை அனுப்பலாம் - திமுக அறிவிப்பு!

இப்படத்திற்கு சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ளார். ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான '12th Fail', நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் ஷர்மாவின் போராட்ட வாழ்க்கையை விவரிக்கும் இப்படம் அனுராக் பதக்கின் பிரபலமான நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் 69-வது ஃபிலிம்ஃபேர் விருது விழாவில், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் (விமர்சகர் தேர்வு), சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங் ஆகிய பிரிவுகளில் ‘12th Fail’  திரைப்படம் விருதுகளை வென்றது. இதையடுத்து பிப்.2-ம் தேதி ‘12th Fail’  திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

அதில், ​​இயக்குநர் விது வினோத் சோப்ரா தனது திரைப்படம் 100 நாட்களை நிறைவு செய்ததைப் பற்றி மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "ஐபிஎஸ் மனோஜ் குமார் ஷர்மாவை பற்றி விக்ராந்த் மாஸ்ஸி நடிப்பதற்கு முன், அனைவரும் என்னை பயமுறுத்தினர். திரைப்பட விமர்சகரான என் மனைவி அனுபமா சோப்ரா உட்பட அனைவரும் தன்னிடம் விக்ராந்த் மாஸ்ஸி படம் திரையரங்குகளில் சரியாக வராது என்று கூறினர். ஆனால் உண்மையில், ‘12th Fail’ திரைப்படம் மக்களின் வரவேற்பை பெற்றது. மேலும், Sacnilk.com-ன் அறிக்கைப்படி, ஏறக்குறைய ரூ.20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், இந்தியாவில் மட்டும் ரூ.55.63 கோடி வசூலித்துள்ளது. தொடர்ந்து இந்த திரைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

Tags :
Advertisement