மாலை நடைபெறும் தவெக மாநாடு - காலை 6 மணிக்கே நிரம்பி வழியும் திடல்!
இன்று மாலை 6 மணி மாநாட்டுக்கு காலை 6 மணிக்கே ரசிகர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் என இப்போதே மாநாட்டு அரங்கம் நிரம்பி வழிகிறது.
தவெகவின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடக்கிறது. விஜய்யின் முதல் மாநில மாநாட்டை முன்னிட்டு விக்கிரவாண்டியே திருவிழா போல் களைகட்டி வருகிறது. அந்த வகையில், இதற்காக அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாநாடு நடக்கும் வி.சாலையில் அதிகாலையிலேயே அதிகளவில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. ஆம், இன்று மாலை 6 மணி மாநாட்டுக்கு காலை 6 மணிக்கே ரசிகர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் என இப்போதே மாநாட்டு அரங்கம் நிரம்பி வழிகிறது.
இதனால், 10 மணிக்கு திறக்கப்பட இருந்த மாநாட்டு திடல், முன்கூட்டியே திறக்கப்பட்டு மக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஒரேநேரத்தில் உள்ளே வந்தவர்களால், மாநாட்டிற்கு தடுப்புகளை தாண்டி உள்ளே வந்த தொண்டர்கள் உற்சாகத்துடன் மேடையை நோக்கி வருகை தந்தனர். ஆரவாரம் செய்த தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் பவுன்சர்கள் திணறினர்.
தவெக மாநாட்டிற்காக 250 ஏக்கர் பரப்பளவில் 5 இடங்களில் பார்க்கிங் வசதிகள் செய்த நிலையில் காலை 11 மணிக்குள் பார்க்கிங் பகுதி முழுவதுமாக நிரம்பிவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், 8 லட்சம் பேர் வரை வரும் நிலையில், 50 ஆயிரம் இருக்கைகளே உள்ளன. இதனால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போகக்கூடும். இதன் காரணமாகவே, முதியவர்கள், சிறார்கள், உடல்நலம் குன்றியவர் மாநாட்டுக்கு வர வேண்டாம் என விஜய் அடுத்தடுத்து கூறி வருகிறார்.