For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பாஜக ஆட்சியில் இல்லை என்றாலும், கேரளாவின் வளர்ச்சிக்காக உழைக்கிறோம்” - பிரதமர் மோடி பேச்சு!

04:06 PM Feb 27, 2024 IST | Web Editor
“பாஜக ஆட்சியில் இல்லை என்றாலும்  கேரளாவின் வளர்ச்சிக்காக உழைக்கிறோம்”   பிரதமர் மோடி பேச்சு
Advertisement

பாஜக கட்சி ஆட்சியில் இல்லை என்றாலும், கேரளாவின் வளர்ச்சிக்கு நாள்தோறும் உழைத்து வருவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

Advertisement

இதுகுறித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

"கேரளா வருவதே எப்பொழுதும் எனக்கும் மகிழ்ச்சிதான். கேரள மக்களிடம் எனக்கு மிகுந்த அன்பு இருக்கிறது. கேரள மக்கள் எனக்கு கொடுக்கும் அன்பைத் திருப்பி அளிப்பதற்கு கடினமாக முயற்சி செய்து வருகிறேன். வரும் மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவதே பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியின் முழக்கம்.

கேரள மாநிலத்தை மத்திய அரசு ஒருபோதும் புறக்கணிக்காது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு இணையாக கேரளா மாநில அரசு உள்ளது. பாஜக எந்தவொரு மாநிலத்தையும் வாக்கு வங்கி கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை. கேரளாவில் பாஜக கட்சி ஆட்சியில் இல்லை என்றாலும், கேரளாவின் வளர்ச்சிக்கு நாள்தோறும் உழைத்து வருகிறோம்.

2024-ல் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி, இதை எதிர்க்கட்சிகளே ஏற்றுக் கொண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் குறிக்கோள் என்னை பற்றி அவதூறு பரப்புவதுதான். காங்கிரஸ் கட்சிக்கு நாட்டின் நலனை விட அவர்களது குடும்பத்தின் நலன் மேலானது. தேசத்தைக் கட்டியெழுப்ப பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கேரள மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்பதை நான் அறிவேன். பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும்"

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags :
Advertisement