“விஜய் அரசியலுக்கு சென்றாலும்...” - விருப்பம் தெரிவித்த சசிகுமார்!
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் கடந்த மே 1 ஆம் தேதி வெளியான திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில் இப்படத்தை திரையிட்டுள்ள திருப்பூரில் உள்ள தனியார் திரையரங்கிற்கு சசிகுமார் உள்ளிட்ட டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவினர் சென்று ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை கண்டுகளித்தனர்.
தொடர்ந்து அங்கு அவர் ரசிகர்களுடன் பேசியபோது, படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரித்து ரசிகர்களிடம் இலங்கை தமிழில் பேசி உற்சாகப்படுத்தினார். பின்னர் திரையரங்கில் இருந்த அனைவருடனும் செல்பி எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.
இதனிடையே படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சசிகுமாரிடம் தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்தபோது, “விஜய் மேலும் படங்கள் நடிக்க வேண்டும். அவர்
பெரிய என்டர்டெய்னர். எனவே அரசியலுக்கு சென்றாலும் அவர் தொடர்ந்து படங்கள் நடிக்க வேண்டும். நடிகர் அஜித் குமார் பத்மபூஷன் விருது
பெற்றதற்கு வாழ்த்துக்கள்” இவ்வாறு அவர் கூறினார்.