Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

யூரோ கால்பந்து தொடர் 2024 : 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின் அணி!

06:54 AM Jul 15, 2024 IST | Web Editor
Advertisement

ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்திற்கிடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடரில் 4வது முறையாக சாம்பியன் பட்டம்  ஸ்பெயின் அணி வென்றுள்ளது.

Advertisement

ஜெர்மனியின் பெர்லின் நகரில் இந்தப் போட்டி நடைபெற்றது. இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் பதிவு செய்யும் நோக்கில் கவனம்  செலுத்தி விளையாடின. முதல் பாதி ஆட்ட நேரத்தில் சுமார் 70 சதவீதம் பந்தை ஸ்பெயின் அணி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இந்த சூழலில் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. 47-வது நிமிடத்தில் அற்புதமான கோல் பதிவு செய்தார் இளம் வீரர் நிக்கோ வில்லியம்ஸ்.60-வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் சப்ஸ்டிடியூட் செய்யப்பட்டார். அவருக்கு மாற்றாக ஆலி வாட்கின்ஸ் உள்ளே வந்தார். அதே போல 70-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்காக மாற்று வீரராக பால்மர் உள்ளே வந்தார். இடையில் ஸ்பெயின் கேப்டன் மொராட்டா சப்ஸ்டிடியூட் செய்யப்பட்டார்.

73-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் பால்மர் கோல் பதிவு செய்தார். பாக்ஸுக்கு வெளியே சில மீட்டர் தொலைவில் இருந்து பலமாக ஓங்கி உதைக்கப்பட்ட அந்த ஷாட் கோல் ஆனது. சுமார் 118 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து கோல் போஸ்ட்டுக்குள் சென்றது. அதன் மூலம் ஆட்டம் 1-1 என சமன் ஆனது.

இதையும் படியுங்கள் : ‘எடுத்தேன் பாரு ஓட்டம்’… வீட்டில் ஆள் இல்லை என நினைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் – மின்விளக்குகளை போட்டதும் தப்பி ஓட்டம்!

தொடர்ந்து ஸ்பெயின் அணி அட்டாக்கிங் ஆட்டத்தை முன்னெடுத்தது. அதன் பலனாக 86-வது நிமிடத்தில் குர்குலே பாஸ் செய்த பந்தை ஸ்பெயினின் மைக்கெல் கோல் ஆக்கினார். இவர் மொராட்டாவுக்கு மாற்றாக களத்துக்கு வந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் 90 நிமிடங்கள் மற்றும் ஸ்டாப்பேஜ் டைம் நிறைவடைந்ததும் இறுதி விசில் அடிக்கப்பட்டது. அதன் மூலம் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது உறுதியானது. யூரோ தொடரில் முறையே 1964, 2008, 2012, 2024 ஆகிய ஆண்டுகளில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன் மூலம் அதிக முறை (4) யூரோ கோப்பை பட்டம் வென்ற அணியாக மாறியுள்ளது.

Tags :
euro cup titleeuropeFinalfootballRecordSpainvictory
Advertisement
Next Article