For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Lebanon - #Isreal இடையே போர்ப்பதற்றம் அதிகரிப்பு | இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 50 பேர் பலி!

07:35 PM Sep 23, 2024 IST | Web Editor
 lebanon    isreal இடையே போர்ப்பதற்றம் அதிகரிப்பு   இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 50 பேர் பலி
Advertisement

லெபனானில் புதிதாக இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Advertisement

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களும், 40,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.

இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராகவும், ஹமாஸுக்கு ஆதரவாகவும் அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியது. அந்த அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக குண்டுவீசித் தாக்குதல், ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் என போர் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக இஸ்ரேல் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறித்து வைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பில் இருந்தும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த செப். 20-ம் தேதி, லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புகர் பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்தது. தவிர, இந்தத் தாக்குதலில் 68 போ் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிறப்பு அதிரடிப் படையான ‘ரத்வான்’ படை தளபதி இப்ராஹிம் அக்கீல் உயிரிழந்ததாக அந்த அமைப்பு அறிவித்தது. மேலும், அதே சிறப்புப் படையைச் சோ்ந்த அகமது வாபியும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தெற்கு லெபனானில் கிராமங்கள், நகரப் பகுதிகள் உள்பட மொத்தம் 19 இடங்களை ஹிஸ்புல்லா ஆயுதக்குழுக்கள் ஆயுதக் கிடங்குகளாக பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள வரைபடத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், லெபனான் மீது இஸ்ரேல் விமானப் படைகள் தாக்குதல் நடத்தியதில் 50 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், இந்தத் தாக்குதலுக்கு 300 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

Tags :
Advertisement