Gold Rate | அதிரடியாக குறைந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.
இதையும் படியுங்கள் : திருமணமான 9வது நாளில் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி… நடந்தது என்ன?
அதன்படி, நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ320 உயர்ந்து ரூ.73,040க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.9,130க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று விலை மாற்றமின்றி, அதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று (ஜுன் 7) அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.71,840-க்கும், கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.8,980-க்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது.
இதனிடையே, இன்று வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 அதிகரித்து ரூ.117-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,17,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்த நிலையில், இன்று சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.