"ஈரோடு எம்.பி கணேசமூர்த்திக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படாததால் சோகத்தில் தென்னை மரத்திற்கு தெளிக்கும் நஞ்சை கரைத்து குடித்துள்ளார்" - வைகோ பேட்டி!
"ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாததால் சோகத்தில் தென்னை மரத்திற்கு தெளிக்கும் நஞ்சை கரைத்து குடித்துள்ளார்" என மருத்துவமனையில் சந்தித்த பின் வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை கே எம் சி ஹெச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈரோடு எம்பி
கணேசமூர்த்தியை நேரில் சந்திப்பதற்காக மருத்துவமனைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருகை தந்தார் . மருத்துவமனையில் கணேசமூர்த்தியை பார்த்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ தெரிவித்ததாவது..
“ கண்ணின் மணியாக திகழ்ந்தவர் ஆருயிர் சகோதரர், தோழர் கணேசமூர்த்தி. அறிஞர் அண்ணாவை நேரில் பலமுறை சந்தித்தவர். அன்றே சட்டமன்ற உறுப்பினரானார், 3 முறை நாடாளுமன்ற உறுப்பினரானார். இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக
கட்சியில் அனைவரும் துரை வைகோ என சொன்னபோது நான் ஏற்கவில்லை.
வாக்கெடுப்பு நடந்தி அதிலும் 99% வாய்ப்பு வழங்கி கூட்டணியில் 2 இடங்கள் வாங்கி ஒன்று துரை வைகோ மற்றொன்று கணேசமூர்த்திக்கு என்று கட்சியில் சொன்னார்கள், ஆனால் அது முடியாதபோது காயம் ஆரிய பிறகு அடுத்த தேர்தலில் முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லி நல்ல தொகுதியை பார்த்து சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வைத்து அடுத்து பெரிய பொறுப்பு வழங்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன்.
அதன் பின்னும் தன்னிடம் பிரியமாக பேசிய கணேசமுர்த்தி இது குறித்து தனது மகன், மகள் ஆகியோரிடையே எதையும் காட்டிக்கொள்ளாத போது பதட்டமும் இல்லாமல் சோகத்தில் உள்ளதை போல தெரியாத அளவிற்கு இருந்து தென்னை மரத்திற்கு போடும் நஞ்சை கரைத்து குடித்துள்ளார்.
அங்கு வந்த கபிலன் என்பவரிடம் "நான் போய்ட்டு வருகிறேன்" என்று சொல்லியுள்ளார் கணேசமூர்த்தியை காப்பாற்ற 50 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவமனையில் இதுபோன்ற சிகிச்சைக்கு வருபவர்கள் பிழைத்துள்ளார்கள். அதற்குண்டான சிகிச்சை வசதிகள் தங்கள் மருத்துவமனையில் இருப்பதாகவும் நம்பிக்கையுடன் இருங்கள் என தன்னிடமும், அவரது உறவினர்களிடமும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
2 நாட்கள் போகட்டும் என மருத்துவர்கள் சொல்லியுள்ளனர். நஞ்சை முறிக்க
மருந்து கொடுத்துள்ளதுடன் எக்மோ கருவி வைத்துள்ளனர் எனவும் நிபுணத்துவம்
வாய்ந்த மருத்துவர்கள் நம்பிக்கை வையுங்கள் என சொல்லியுள்ளனர்” என வைகோ தெரிவித்துள்ளார்.